சாலை விபத்தில் காயமடைந்தோருக்கு இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!
நம் நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 4,75,ஓக்கும் அதிக சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,75,000 பேர் மரணம் அடைந்து விடுகின்றனர். 4,25,000 பேர் காயம் அடைந்து விடுகின்றனர்.குறிப்பாக தொடர்ந்து பல ஆண்டுகளாக, அபாயகரமான சாலை விபத்தில் உயிரிழப்போர் மற்றும் காயமடைவோரில் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருக்கிறார்கள். அதாவது, 18 – 45 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இந்தியாவின் சாலை விபத்துகளில் 73.5 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மணி நேரமும் இந்திய சாலைகளில் 69 விபத்துகள் நேர்கின்றன. இந்த விபத்து காரணமாக மணிக்கு 28 உயிரிழப்புகள் பதிவாகின்றன. இச்சூழலில் மத்திய அரசு சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக ஒரு முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது.வரும் 2030-க்குள் சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கையை பாதியாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. சாலை விபத்துகள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற கண்டிப்பை அடுத்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நம்மை காக்கும் 48 திட்டத்தில் ஏற்கனவே இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால், ரூ.1.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.மேலும், 7 நாட்கள் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அமைத்திருக்கிறது.
திட்டத்தின் நோக்கம்:
இந்தியா முழுவதும் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடி மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வது.
2030-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை 50% குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்பு:
இந்தத் திட்டம் குறிப்பிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது.
திட்டத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் 17 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பின்னணி:
சாலை விபத்துகள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் கண்டிப்பான அறிவுறுத்தல்களை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், விபத்து ஏற்பட்ட உடனேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயன்பெறுவோர்:
இந்தியா முழுவதும் சாலை விபத்துகளில் காயமடையும் அனைத்து நபர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
குறிப்பாக, உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும்.
மொத்தத்தில் இந்த அறிவிப்பு சாலை விபத்து பாதிப்பாளர்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்வதோடு, நிதிச்சுமையைக் குறைக்கவும் உதவும். மேலும், உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு இது ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
தனுஜா


