வேட்பாளர்களில் கோடீஸ்வரர்கள், கிரிமினல்கள் டாப் – தமிழ்நாடு
மக்களக்கு வரும்24ம் தேதி நடைபெற உள்ள 6ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 சதவீதம் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. மக்களவைக்கு நடைபெறும் 6ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 2077 வேட்பாளர்களில் 2071 வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சுய விவர அறிக்கையை ஆய்வு செய்துள்ள தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக மறுசீரமைப்புக் கழகம் இதனை தெரிவித்துள்ளன. மற்ற 6 வேட்பாளர்களின் சுய விவர அறிக்கை முழுமையடைய வில்லை என்பதால் அதனை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லையாம்.

இந்த ஆய்வில், 2017 வேட்பாளர்களில் 321 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 204 பேர் மீது மிக மோசமான வழக்குகள் உள்ளன. மற்றவர்கள் மீது மோசமான வழக்குகள் இல்லை. இதில் தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 103 வேட்பாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 68 வேட்பாளர்களும், பிகார் 38 வேட்பாளர்களும் குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.
இதுமட்டும் அல்ல, கோடீஸ்வர வேட்பாளர்களின் பட்டியலிம் தமிழகம் 178 கோடீஸ்வர வேட்பாளர்களைப் பெற்று முன்னணி வகிக்கிறது. மகாராஷ்டிரா 111 கோடீஸ்வர வேட்பாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


