குத்துவிளக்குக்கு பின்னால் இப்படி ஒரு கதை!

குத்துவிளக்குக்கு பின்னால் இப்படி ஒரு கதை!

நேற்று ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது அது ஐஐடி வளாக அரங்கத்தில் நடந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி பற்றிய கருத்தை தோழர் திருமுருகன் காந்தி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், தோழர் ஆளூர் ஷானவாஸ், கவிஞர் அறிவு மற்றும் இசையமைப்பாளர் டென்மா ஆகியோர் பேசிக்கொண்டிருந்தார்கள் சாதிய கட்டமைப்பு கொண்ட ஐஐடியில் எந்த உணவை போடகூடாது என்றார்களோ அதே மாட்டின் தோலை உரித்து அதனிலிருந்து செய்த பாறையை கொண்டு ஐஐடியின் சனாதனம் நொறுக்கப்பட்டது என பேசிகொண்டிருந்தனர்.

எனக்கு சில நிகழ்வுகள் அப்படியே வந்து நின்றன சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஐடியில் தொடங்கப்பட்ட பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம், ஐஐடி கேண்டினில் அசைவம் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட வன்முறை இதை எல்லாம் விட கொடுமையாக அத்துனை தகுதியும் இருந்தும் பிற்பட்ட சமூகம் என்பதால் பதவி அளிக்கப்படாத கணித மேதை பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களின் சட்டப்போராட்டம் இதை எல்லாம் விட குவைத்தில் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கத்தில் நடந்த முற்போக்கு மாற்றங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து சென்றன.

நிற்க…

2009 ஆண்டு இறுதியில் வானம்பாடியின் வருடாந்திர நிகழ்ச்சி நடத்த திட்டமிட வேண்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது அந்த கூட்டத்தில் தான் யார் யாரை அழைத்து வருவது என்று முடிவெடுக்கப்படும் எபோதும் 6 மாதங்கள் முன்பே திட்டமிடும் பழக்கம் இருந்தாலும் அந்த வருடம் நடந்த ஈழப்படுகொலையால் நிகழ்ச்சியை நடத்துவதா வேண்டாமா என சந்தேகத்துடனையே ஆகஸ்ட் இறுதியில் தான் கூடினோம் பலகருத்துகள் பேசப்பட்டாலும் என் கருத்தாக நிகழ்ச்சியை நடத்தனும் அதே நேரம் முழுக்க முழுக்க இனம் சார்ந்த அடையாளமாக இந்த குவைத் மண்ணில் நாம் நிகழ்த்தனும் என்ற புரிதலுடன் பேசினேன்.

இந்த நிகழ்ச்சிக்கு யாரை அழைக்கனும் என்ற கலந்தாய்வு வந்த போது நான் அண்ணன் சீமானை முன்மொழிந்தேன், நல்ல வேளையக வானம்பாடியில் இருந்த மூத்த உறுப்பினர்களுக்கு சீமானை தெரியாது எனக்கே தம்பி திரைப்படமும் அதன் பிறகு இராமேஸ்வர பேச்சு அதனை தொட்டு சிறை இந்த அளவில் தெரியும் அதை விட ஒரு உணர்ச்சி வயமாக பேசி இங்கே உள்ள தமிழர்களுக்கு இன உணர்வை ஊட்டமுடியும் என்ற வகையில் நம்பினேன் முன்மொழிந்தேன், இளைஞர்களுக்கு சீமானை தெரியும் ஆனால் நிறுவனர் எங்கள் ஐயா சேதுவிற்கு அன்றைக்கு தெரியாது அவர் கேட்டார் யார் தம்பி சீமான்?.. ஐயா அவர் ஒரு திரைப்பட இயக்குனர் நல்லா பேசுவார் என்றேன் நீங்க கேட்டிருக்கியலா தம்பி என்றார் கேட்டிருக்கேன் ஐயா என்று சொன்னேன் சீமான் அவ்வளவாக எல்லோராலையும் அறியப்படாத காலம். சீமானை அழைத்துவரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைப்பட்டது சீமானை யாரை வைத்து அணுகுவது? நம்ம அண்ணன் அறிவுமதியை விட்டா வேற வழியே இல்லை அறிவுமதி அண்ணனை தொடர்புகொண்டு விபரத்தை சொன்னேன் நீண்ட தயக்கத்திற்கு பின்பு சில சிக்கல்களை சொல்லிட்டு சரி பேசுறேண்டா கண்ணு யாராவது ஊருக்கு வந்தால் நல்லாருக்கும் நேரில் பேசனும் என்றார். நானும் எனது விடுமுறையை முன்னாடியே எடுத்துக்கொண்டு நேரில் சென்று அண்ணன் சீமானையும், அறிவுமதியையும் சந்தித்து ஒப்புதல் பெற்று நிகழ்ச்சியும் ஏற்பாடாகிவிட்டது.

வானம்பாடி நிகழ்ச்சியில் மட்டுமல்ல இங்கே நடக்கும் நிகழ்ச்சியில் சில விடயங்கள் எனக்கு உறுத்தலாகவே இருக்கும் ஒன்று நிகழ்ச்சி துவங்கும் போது குத்துவிளக்கு ஏற்றுதல் அந்த நேரத்தில் ஒலிக்கப்படும் மங்கள இசையினு சொல்லிட்டு ஒலிக்கப்படுவது அதைவிட கொடுமையாக இந்த நிகழ்வு முடிந்தவுடன் பரதம் என்ற நம் பாரம்பரிய நிகழ்ச்சியில் தெலுங்கு கீர்த்தனைகளை கொண்டு தைய தக்க என குதிப்பதை பார்க்கும்போதெல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வரும் ஆனால் நாம் ஏதும் சொல்ல முடியாது ஏனென்றல் நிறைய கவிஞர்கள் கவிதை எழுதுவதை சாமி தான் கொடுத்தது என்று நம்புபவர்கள். இந்த எழுதப்படாத விதிகளை ஓரளவாவது நாம் மாற்றனும் என்ற எண்ணத்தை செயல்படுத்த 2009 ஆண்டு ஏதுவாக இருந்தது ஏனென்றால் சில ஆன்மிக கவிஞர்கள் தூர சென்றிருந்தார்கள் அதை விட வருவது பெரியாரின் பேரன்கள் விடுதலைப்பவலர் அறிவுமதியும், அண்ணன் சீமானும் இதை ஆயுதமாக கொண்டு சில மாற்றங்களை செய்யலாம் என்ற முடிவுடன் ஐயா செம்பொன்மாரி சேதுவிடம் என்னைவிட ஆழமாக இந்த நடைமுறைகள் சுத்தமாக பிடிக்காத ஐயா கவிஞர் முனு சிவசங்கரன் அவர்களும், தமிழ் ஆர்வம் கொண்ட தம்பி விருதை பாரி எல்லோரும் இந்த முறை பரத நாட்டியத்தில் தா தீம்லா இருக்கவேண்டாம்யா அதுக்கு பதிலா தமிழ்ப் பாடலில் ஆட சொல்லலாம் என்றோம்

அவர் தம்பி நானா வேண்டாம்னே எனக்கு தெரிந்தவர்கள் எல்லாம் இப்படி தான் ஆடுவார்கள் நீங்கள் தெரிந்தவுக இருந்தா ஆடவையுங்கள் என்று கோபத்துடன் சொன்னார் அவரின் கோபம் நிகழ்ச்சியில் உள்ள அக்கரையின் வெளிப்பாடு . சரிங்கய்யா நாங்க ரெடி பண்ணுறோம் நீங்களும் உங்கள் இடத்தில் கேளுங்கள் அவர்கள் முடியாது என்றால் நாம் வேறு இடத்தில் பார்க்கலாம் என்று சொன்னோம் சரி தம்பி என்றவர் போனில் தொடர்புகொண்டுவிட்டு அமைத்து தாராகலாம் பாடல் அவர்களிடம் இல்லையாம் நம்மள கேக்குறாங்க தம்பி என்றார்.

தமிழுக்கும் அமுதென்று பேர் பாடலை முன்மொழிந்தோம் அவர்கள் அந்த பாடலை கேட்டுவிட்டு இதுக்கு படத்தில் நடனமே இல்லையே ரொம்ப சிரமம் என்றார்கள் அதன் பிறகு ஐயா அவர்களே நடிகர் திலகம் அவர்களின் படத்தில் இருந்து அழகான தமிழ்ப்பாடலை எடுத்துகொடுத்து சம்மதம் பெற்றார்கள் முதல்முறையாக வானம்பாடி மேடையில் பரத நாட்டியம் தமிழ்ப்பாடலுக்கு அந்த நிகழ்வில் தான் ஆடப்பட்டது.

இரண்டாவது மாற்றமாக குத்துவிளக்கு ஏற்றும் போது மங்கள இசையாக நாதஸ்வரம் மேளமே இசைக்கப்பட்டு வந்த போது முதன்முறையாக தம்பி மறைந்த விருதை பாரியின் முயற்சியில் பறையிசையை பதிவுசெய்து வந்து மிகசிறப்பாக அண்ணன் அறிவுமதி, சீமான், இந்திய தூதுவர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றும் போது கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் மங்கள இசையாக பறையிசையை ஒலிக்க செய்தோம்.

இரண்டு மாற்றங்களை அதிரடியாக செய்தபோதும் குத்துவிளக்கு ஏற்றுவதற்கான தேடல் மட்டும் எனக்கு இருந்துகொண்டே போனது, என் அறிவுக்கு எட்டிய தூரம் சிந்தித்தேன் உலகில் எந்த இனத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு தமிழ் இனத்திற்கு உண்டென்றால் அது நன்றி அறிவிப்பு அதன் வெளிப்பாடு தான் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் அதே போல ஏன் இந்த விளக்கேற்று நிகழ்வுக்கும் இருக்கக்கூடாது என்று சிந்தித்து என் தேடலை தொடங்கி படித்து நானே ஒரு முடிவுக்கு வந்தேன்.

ஆம், மனித நாகரிகம் நெருப்பில் இருந்து தான் தொடங்குகிறது நம் ஆதி மனிதன் நெருப்பு என்ற ஒன்றை மட்டும் கண்டுபிடிக்காமல் போயிருந்தால் என்ற எண்ணம் என் நெஞ்சில் முளைத்தது.
இன்று
இந்த அரங்கம் வண்ண விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்டிருந்தாலும்
நம் இல்லங்களில் சுடர் விளக்குகள்
சுடர் விட்டு எரிந்தாலும்
இந்த அறிவியல் மாற்றத்திற்கு அடிப்படை காரணம் – நெருப்பு
அந்த நெருப்பை கண்டுபிடித்த
அந்த ஆதிமனிதனுக்கு அகவணக்கம் செலுத்தும் விதமாகவும்
ஒரு வீடு சிறக்கவும்
ஒரு நிகழ்ச்சி சிறப்பாக நடக்கவும்
பெண்களால், பெரியவர்களால் ஏற்றப்படுவது குத்துவிளக்கு!

அந்த திருவிழக்கை ஏற்றி நிகழ்ச்சியை இனிதே துவக்கி வைக்க விடுதலைப்பாவலர் அண்ணன் அறிவுமதி, டாப்ஸ்டார் பிரசாந்த், இயக்குனர் தியாகராஜன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் என 2012 ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க எனக்கு கிடைத்த வாய்ப்பில் குத்துவிளக்கு ஏற்றுவதற்கான விடையை என் அளவில் கண்டு ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அறிவித்தேன், மிக சிறப்பான விளக்கத்தை கொடுத்திருக்கே என்று அண்ணன் அறிவுமதி என் கண்ணத்தை தட்டி சொன்னார், குத்துவிளக்குக்கு பின்னால் இப்படி ஒரு கதையா எனக்கு தெரியாதே என்றார் திரு தியாகராஜன் அவர்கள். 2009லிருந்து வானம்பாடி மேடையில் குத்துவிளக்கு ஏற்றும் போதெல்லாம் பறையிசை தான் மங்கள இசையாக இசைக்கப்படுகிறது.

#மார்கழியில்_மக்களிசை

செங்கை நிலவன்
29-12-2021

error: Content is protected !!