மீண்டும் மஞ்சள் பை – திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

மீண்டும் மஞ்சள் பை – திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

மிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தேக்கம் ஏற்பட்ட தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாறாக, மாற்றுப் பொருட்களின் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மஞ்சள் பையை வைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் கிண்டலுக்கு உள்ளாகும் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “மஞ்சள் பை தான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. சுற்றுச்சூழல் பிரச்சினை தான் மானுடத்தின் மாபெரும் பிரச்சனை. பிளாஸ்டிக்கை தவிர்த்து மீண்டும் துணி வகைகளுக்குத் திரும்ப வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கம் ஆகும். அந்த சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேடு விளைவிப்பது தான் பிளாஸ்டிக் அந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் முற்றிலும் குறைத்தாக வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக்கை மண்ணில் போட்டால் மற்ற பல ஆண்டுகள் ஆகும் இதனால் மண் வளம் பாதிக்கப்படுகிறது நீர் வளம் பாதிக்கப்படுகிறது சுற்றுச்சூழல் மாசடைகிறது. 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தமிழக அரசு தடை விதித்துள்ளது. விதிகளை மீறி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 130 தொழிற்சாலைகளுக்கு இதுவரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தாலும் பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

மேலும், அரசாங்கம் மற்றும் நினைத்தால் இதை நிறைவேற்ற முடியாது மக்களும் நினைத்தால் தான் இதை முழுமையாகத் தடை செய்ய முடியும் எனவும் மக்கள் நினைத்தால் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

error: Content is protected !!