June 7, 2023

என் சம்பளம் லட்சங்களைத் தாண்டலை – இடியட் பிரஸ்மீட்டில் இயக்குநர் அப்செட்!

க்டர் என்று ட்விட்டரில் அடைமொழியுடன் உலா வரும் மிர்ச்சி சிவா நடிப்பில் ‘இடியட்’ திரைப்படம் உருவாகியுள்ளது. லொள்ளு சபா புகழ் ராம் பாலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஏற்கெனவே தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களை இயக்கியவரிவர். இந்தப் படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரர் காமெடி வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தில் ஊர்வசி, கருணாகரன், ரவிமரியா, மயிலசாமி, ஆனந்த ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மிர்ச்சி சிவா பேசிய போது “இரண்டு வருடங்கள் கடந்து எல்லோரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்த கொரோனா நிறைய கற்றுக்கொடுத்து விட்டது. கொரோனா உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் ராம்பாலா இந்தப் படத்தை பற்றி சொன்னார், ஆனால் அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவரையும் ஒன்று சேர்த்து படத்தை துவக்கி விட்டார் தயாரிப்பாளர் சுந்தர். அவரது வாழ்வை கேட்டால் பிரமிப்பாக இருக்கும். ஒளிப்பதிவாளர் ராஜா எப்போதுமே சிரித்த முகமாக இருப்பார்.

நிக்கி கல்ராணி போல அர்ப்பணிப்பு கொண்ட நடிகையை, பார்க்க முடியாது ஒரு காட்சியில் அவர் டெட்பாடியாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கே நிறைய டவுட் கேட்டார். அந்தளவு சீரியஸான நடிகை. நடிகர் ஆனந்த்ராஜ் உலகத்தில் எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம் ஆனால் நடிப்பில் அசத்திவிடுவார்.

மயில்சாமி பிரமிப்பு தரும் மனிதர் தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களுக்கு, அவர் செய்யும் கொடைகள் பெரிது. அவரிடம் பெரிய மரியாதை உள்ளது. டீம் கேப்டன் நன்றாக இருந்தால் தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும். எங்கள் டீமிலேயே பெரிய ‘இடியட்’ ராம்பாலா சார் தான். உண்மையிலேயே அவரின் உழைப்பு அவர் அமைக்கும் காட்சிகள் எல்லாமே அட்டகாசமாக இருக்கும்.

இன்னும் நிறைய படங்கள் அவர் செய்ய வேண்டும். தியேட்டரில் தான் இந்தப்படத்தை வெளியிட வேண்டும் என்றார் தயாரிப்பாளர், அவரின் நம்பிக்கைக்கு நன்றி. ஒரு பேய் எப்போதும் இருட்டில், மியூசிக்கில் பயமுறுத்தும் ஆனால் அது இந்தப்படத்தில் இருக்காது. அதனால் தான் இந்தப்படத்தை ஒப்புக்கொண்டேன். படத்தின் ரகசியத்தை சொல்லிவிட்டேன் ஆனாலும், இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் நன்றி.

நடிகர் மயில்சாமி பேசியது…

இந்தப்படத்தை வாழ்த்தும் அனைவருக்கும் என் நன்றி. முன்பெல்லாம் படம் 50 நாள், 100 நாள் விழா வைப்பார்கள். ஆனால் அது இப்போது நடப்பதில்லை ஆனால் சினிமா எந்த காலத்திலும் அழியாது. எல்லாவற்றையும் கடந்து நிற்கும். இந்தப் படத்தில் நடித்திருந்தாலும் எனக்கு கதை தெரியாது. ராம்பாலா என்னை அழைத்து, ஒரு காட்சியை சொல்லி நடிக்க சொன்னார். நடித்து முடித்தவுடன் நடிகன்யா நீ என என்னை பாராட்டினார். ஒரு காலத்தில் சினிமாவை விட்டே போக நினைத்தேன், ஆனால் சிவக்குமார் இரு, உனக்கென்று ஒரு கதாப்பாத்திரம் கிடைக்கும் என்றார்.

அப்படி கிடைத்தது தான் குடிகாரன் கதாப்பாத்திரம். இப்போது எல்லா படங்களிலும் குடிகாரன் அல்லது சாமியார் கதாப்பாத்திரம் தான் வருகிறது. அது தான் என்னை வாழவைக்கிறது. ராம் பாலா லொள்ளு சபாவில் நிமிடத்திற்கு 10 பஞ்ச் அடித்து கலக்குபவர். லேட்டாக திரைக்கு வந்திருக்கிறார். ஆனால் கண்டிப்பாக தொடர்ந்து ஜெயிப்பார். இந்தப்படம் எல்லோருக்கும் பெயர் வாங்கி தரும் எனக்கும் பெயர் வாங்கி தரும்.

நடிகை நிக்கி கல்ராணி பேசியது

‘இத்தனை மாதம் கடந்து அனைவரையும் சந்தித்ததில் சந்தோஷம். கொரோனா காலத்தில் ராம் பாலா சார் அழைத்து இந்த வாய்ப்பை பற்றி சொன்னார். இந்தப் படத்தின் அனுபவமே சிறப்பாக இருந்தது. போன வருடம் கொரோனா காலத்தில் உலகமே மன அழுத்தத்தில் இருந்தபோது நான் இந்த படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக இருந்தேன். மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோகர், மிர்ச்சி சிவா அனைவருடனும் நடித்தது, சந்தோஷம்.

இப்படத்திற்கு ராஜா அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஓடிடியில் மிக எளிமையாக விற்றுவிடும் வாய்ப்பு இருந்தும், தியேட்டரில் ரசிகர்கள் ரசிக்க வேண்டுமென, இப்போது தியேட்டரில் வெளியிடும் தயாரிப்பாளருக்கு நன்றி. ஏற்கனவே டார்லிங், மரகத நாணயம் படங்களில் பேய் கேரக்டர் செய்துள்ளேன். அந்தப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே போல் “இடியட்” படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும்.”

இயக்குநர் ராம் பாலா பேசியது

“இடியட்” படத்திலேயே நிறைய கலகலப்பான சம்பவங்கள் நடந்தது. யார் யாரை இடியட் ஆக்கியுள்ளார்கள் என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஒளிப்பதிவாளர் ராஜா, எடிட்டிங் முடித்து அவரது ஒளிப்பதிவை பார்த்து விட்டேன் நன்றாக செய்துள்ளார். மிர்ச்சி சிவா மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். நிக்கி கல்ராணி நிறைய கேள்வி கேட்பார், எல்லா லாஜிக்கும் அவருக்கு சொல்ல வேண்டும் மிகச்சிறப்பான நடிகை. நடிகர் ரவி மரியாவை முன்பிருந்தே தெரியும் அவரை வில்லனாகத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார். அவரது பாடி லாங்குவேஜ் அட்டகாசமாக இருக்கும். ஆனந்தராஜ் எனக்கு சீனியர். முரட்டுத்தனமான ஒரு ஆள் முட்டாள்தனமாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தபோது அதற்கு பொருத்தமாக ஆனந்தராஜ் இருந்தார். ஊர்வசி மேடத்துடன் மூன்று படங்கள் செய்திருக்கிறேன். இன்னும் பல படங்கள் செய்வேன். மயில்சாமி மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். அடுத்த படத்தில் அவருக்கு ஃபாரின் மாப்பிள்ளை வேடம் தான். எனது உதவியாளர்கள் தான் இந்தப்படம் சரியாக உருவாக துணையாக இருந்தார்கள். சிவா காலையில் ஷூட்டிங்கிற்கு வரும்போதே, சிரித்து கொண்டே வருவார், முடிந்து செல்லும்போதும் அந்தப் புன்னகை அப்படியே இருக்கும். ஜனங்களை குஷிப்படுத்தும் படமாக சிரிக்க வைக்கும் படமாக இப்படம் இருக்கும்.

இந்த மேடையில் இன்னொரு விசயத்தைப் பகிர விருப்பப்படுகிறேன். மக்களை ரசிக்க வைக்கக்கூடிய படங்களைக் கொடுக்கும் என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு மத்திய அரசு விருது கொடுக்க வேண்டும். ஆனால், கத்தி எடுத்துக் கொண்டு கருத்து சொல்கிறோம் என்று கூறக்கூடிய இயக்குனர்களுக்குதான் அங்கீகாரம் கிடைக்கிறது. மக்களை ரசிக்க வைக்க நகைச்சுவை எழுதுவது மிகக்கடினம். அந்த வேலையை நாங்கள் செய்து வருகிறோம். எனவே நகைச்சுவை படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் நிலை ஏற்படவேண்டும். அங்கீகாரம் கிடைக்காததால் சம்பளத்தில் கூட லட்சங்களை தாண்டுவதில்லை