கொரோனா : மும்பையில் நடக்க இருக்கும் ஐபிஎல் ஆட்டங்கள் வேறு நகரங்களுக்கு மாற்றமா?

கொரோனா : மும்பையில் நடக்க இருக்கும் ஐபிஎல் ஆட்டங்கள் வேறு நகரங்களுக்கு மாற்றமா?

விளையாட்டு பிரியர்களின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9–ம் தேதி தொடங்க இருக்கிறது. மும்பை, டெல்லி, சென்னை, அகமதாபாத்,கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று வரை தொடரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களுக்கு போட்டியை நேரில் காண அனுமதி கிடையாது.

இந்த ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 19 பேருக்கு கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ளோருக்கு கொரோனா இல்லை என்றாலும்அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்பை வான்கடே மைதானத்தில்தான் சிஎஸ்கே அணியின் ஆட்டங்கள் அனைத்தும் நடக்கின்றன. ஏப்ரல் 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 10 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஐபிஎல் டி20 தொடர் சென்னையில் தொடங்க இருக்கும் நிலையில், மைதான ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது வீரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மும்பையில் நடக்க இருக்கும் ஐபிஎல் ஆட்டங்களை வேறு நகரங்களுக்கு பிசிசிஐ மாற்றுமா என்ற கேள்வி கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

error: Content is protected !!