8 இந்தியர்களுக்கு கத்தாரில் விதிக்கப்பட்ட மரண தண்டனை..மோடி தலையீட்டால் தப்பித்தார்கள்!

8 இந்தியர்களுக்கு  கத்தாரில் விதிக்கப்பட்ட மரண தண்டனை..மோடி தலையீட்டால் தப்பித்தார்கள்!

நம் நாட்டின் கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேர், இஸ்ரேலுக்கு ஆதரவாக கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் இவர்கள் எட்டு பேரும் கடந்த ஆண்டு ஆக., மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் ஜாமின் மனு பல்வேறு முறை நிராகரிக்கப்பட்டன. இந்த வழக்கில் கத்தார் நீதிமன்றம், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.எட்டு பேர் சார்பிலும் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், எட்டு பேரின் மரண தண்டனையை குறைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தண்டனை விபரம் இன்னும் வெளியாகவில்லை. அவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்களான கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகாலா, கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட் மற்றும் மாலுமி ராகேஷ் கோபகுமார் என 8 பேருக்கு கடந்த அக்டோபரில் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இஸ்ரேலுக்காக கத்தாரின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததான குற்றச்சாட்டின் கீழ் இந்த தண்டனையை கத்தார் விதித்தது.

அந்நாட்டு கடற்படைக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் இந்த 8 பேரும் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கத்தாரின் நீர்மூழ்கி ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்றதாக, 8 இந்தியர்களும் கைதானார்கள். தங்கள் மீதான குற்றச்சாட்டை அவர்கள் மறுத்த போதும், கத்தார் நீதிமன்றம் உரிய விசாரணைக்கு பின்னர் மரண தண்டனை உத்தரவை பிறப்பித்தது. இந்தியர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 8 பேரின் குடும்பத்தினரும் மத்திய அரசிடம் மன்றாடியதில் பலன் கிடைத்தது. குறிப்பாக துபாயில் நடந்த CoP28 உச்சிமாநாட்டின் போது கத்தார் ஆட்சியாளர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த சில வாரங்களில் மரண தண்டனை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு தலைவர்கள் இடையிலான உரையாடலின் விவரங்கள் வெளியாகவில்லை என்ற போதும், இந்தியர்கள் மரண தண்டனையிலிருந்து தப்பி இருப்பது அந்த சந்திப்பின் பின்னணியை உறுதி செய்துள்ளது. குறைக்கப்பட்ட தண்டனை என்பது அனேகமாக கடுங்காவல் சிறைவாசமாக இருக்கலாம் என்ற போதும், அவை தொடர்பான விரிவான விவரங்கள் உடனடியாக வெளிடப்படவில்லை.

error: Content is protected !!