கொரோனா ; தமிழ் நாட்டில் முகமூடி போட வேண்டிய அவசியமில்லை! – அமைச்சர் தகவல்

கொரோனா ; தமிழ் நாட்டில் முகமூடி போட வேண்டிய அவசியமில்லை! – அமைச்சர் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத நிலையில் இன்று தமிழர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் மத்திய கிழக்கு நாடான ஓமன் சென்று திரும்பியுள்ள நிலையில் கொரோனா குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை; முகக்கவசம் அணிய வேண்டிய நிலை தமிழகத்தில் இல்லை. கொரோனா தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். சுகாதாரத்துறை தகவல்களை தவிர வேறு எதையும் மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பு படிப்படியாக சீனாவின் மற்ற பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 97 நாடுகளில் பரவியுள்ளது. 1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்களில், ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வரும் பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்படுகின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பொறியாளர் ஒருவர் ஓமன் நாட்டில் இருந்து பிப்ரவரி 27ம் தேதி சென்னை வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்தார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது; ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். டெக்ஸாசில் இருந்து வந்தவருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்குப் பிறகே கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது தெரிய வரும். கொரோனா பாதித்த நபருடன் விமானத்திக் வந்தவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பாதித்தவரின் உறவினர்கள் உள்பட மேலும் 28 பெரும் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை; முகக்கவசம் அணிய வேண்டிய நிலை தமிழகத்தில் இல்லை. கொரோனா தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். சுகாதாரத்துறை தகவல்களை தவிர வேறு எதையும் மக்கள் நம்ப வேண்டாம். கொரோனா வைரஸ் பரவுவதை 100% தடுத்து வருகிறோம். கொரோனா வைரஸை தடுப்பதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். சீனாவில் கொரோனா பரவியதில் இருந்தே தனி வார்டுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறோம் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை குறித்தும் கொரோனா வைரஸ் தொடர்பாக இந்த அறையின் செயல்பாடுகள் குறித்தும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் , “சென்னை ஏர்போட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிறுவன் ஒருவனுக்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டு உள்ளது.தமிழக அரசிடம் போதுமான மருத்துவ வசதிகள் உள்ளன. பொதுமக்கள் யாரும் அஞ்ச தேவையில்லை.. நோய் தொற்று வராமல் இருக்க மக்கள் அவ்வப் போது கைகளை கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல் பாதுகாப்பு என்ற பெயரில் முகமுடிகளை அணிந்து யாரையும் அச்சப்படுத்த வேண்டாம்” என்றார்

error: Content is protected !!