32°C
விளம்பரம்
Advertisement

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா எங்கே?

admin சேலம் Published: December 18, 2018 1 நிமிட வாசிப்பு Updated: December 19, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




அவ்வப்போது வாட்ஸ் அப் வீடியோக்களில் மட்டும் தோன்றி வரும் சர்ச்சை சாமியார் நித்தி யானந்தா பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இதற்கு நித்யானந்தா தரப்பில் இருந்து இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை.

பிடதி ஆசிரமத்தில் இருந்த பெண் பக்தை ஒருவரை 2010ம் ஆண்டு நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. நித்யானந்தாவின் போதாத காலம், அவரது பாஸ்போர்ட்டும் இந்த நேரத்தில் காலாவதியாகிவிட்டது. புதுப்பிக்க விண்ணப்பித்த போது, விசாரணை முடியும் வரை பாஸ்போர்ட்டை புதுப்பிக்க காவல்துறை தடை விதிததுவிட்டது.

இந்த நிலையில், பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதை அடுத்து அவர் தலை மறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் நீண்ட காலமாக பெங்களூருவிலுள்ள ஆசிரமத்தில் நித்தியானந்தா இல்லாத காரணத்தால் இதுபோன்ற செய்திகள் பரவியுள்ளன. இதுபற்றி அவரது சீடர்களில் ஒருவர் பேசுகையில், “அவர் எங்கே இருக்கிறார் என எங்களுக்குத் தெரியாது. அவர் வட இந்தியாவில் இருப்பதாகவும், விரைவில் திரும்புவார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

விமானம் மூலம் வெளிநாட்டுக்குத் தப்பியோட முடியாத நிலையில், சாலை மார்கமாக நித்யானந்தா நேபாளம் சென்று அங்கிருந்து பிரிட்டன் ஆதிக்கத்தில் உள்ள ஒரு தீவுப் பகுதிக்குச் சென்றுள்ளதாக தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்