மிஸ்டர். சந்திரமெளலி – திரை விமர்சனம்!

மிஸ்டர். சந்திரமெளலி – திரை விமர்சனம்!

நம்ம தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு பல்வேறு உணர்ச்சியை தூண்டிக் விடுவதில் தனி கவனம் செலுத்தி வந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதாவது கோலிவுட் சினிமா ஆடியோ வசதியுடன் மிளிர தொடங்கிய நிலையில் புராண, இதிகாசக் கதைகளும் கதாபாத்திரங்களுமே திரைப்படங்களாக வந்தன. அதனால் 1930-களில் தொடங்கி 1940-கள் வரையிலும் ரசிகர்களின் ரசனை பக்திமயமாக இருந்தது. இதன் பின் ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்க துணிந்து தயாரித்த படங்களால் மிரண்ட பிரிட்டிசார் சென்சார் விதிமுறை கொண்டு வந்த நிலையிலும் சுதந்திர வேட்கை வசனங்களால் துடித்தெழும் போக்கை பல தமிழ் படங்கள் வழங்கின. அதை அடுத்து குடும்பப் பாசம், அம்மா- மகன், அண்ணன் தம்பி,தங்கை உறவை வலுவூட்டும்கதை அம்சம், சிரிப்பை மட்டுமே பிரதானமாகக் கொண்ட திரைப்படம், காதலை மையமாக கொண்ட சினிமா, திகில் கதை, ரொமான்ஸ் மூவி, குழந்தைகளை கவரும் ஃபிலிம் என்று எக்கச்சக்கமான வெரைட்டியில் ஏராளமான படங்கள் வெளி வந்துள்ளன. இந்நிலையில் இன்று ரிலீஸான ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படம் இத்தனை ஆண்டுகள் வெளியான படங்களில் பிரதிபலித்த சிரிப்பு, அழுகை, கோபம், ஆச்சரியம், பயம், வீரம், காதல்,மகிழ்ச்சி, மனநிறைவு என்ற நவரச உணர்வுகளை நம்மூள் பிரதிபலிக்க வைப்பதில் ஜெயித்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.

தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் என்று தொடர்ந்து விஷாலை வைத்து இயக்கிய இயக்குனர் திரு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ரெஜினா கஸாண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், மைம் கோபி, சதீஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். த்ரில் மற்றும் காமெடி கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் அப்பா – மகன் கூட்டணியில் உருவான படங்கள் பல இருந்தாலும், தமிழ் சினிமாவின் இன்றும் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து முதல் முறையாக மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடித்துள்ளார்.
கதை என்னவென்று கேட்டால் திருவின் நான் சிகப்பு மனிதன் படத்தின் குறுகிய பாகம் தான் இது என்று சிம்பிளாகச் சொல்லி விடலாம்.அதாவது அப்பா பாசம், காதல் என்று ஹேப்பியாக சென்றுகொண்டிருக்கும் ஹீரோ ராகவ்வின் வாழ்க்கை திடீரென்று திசை மாறுகிறது. அதிலும் உடல் நல பிரச்சனை ஏற்பட்டு தன் பிரச்சனைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து பழிவாங்குவது தான் படத்தின் மீதிக் கதை.

சீனியர் ஆக்டர் கார்த்திக் – லேட்டஸ்ட் ஹீரோ கௌதம் கார்த்திக் கூட்டணி கலகலப்பாக பேசிப் பழகி ஜாலியாக வாழ்க்கை நகர்த்தும் போக்கே கவருகிஅது. ஆனாலும் நயினா கார்த்திக்-குடன் நடமாடும் போது கெளதம் கொஞ்சம் டம்பி பீஸாகத்தான் தெரிகிறார்..கார்த்திக் காரை மாற்ற மனமில்லாமல் கார் ஷோரூமில் பண்ணும் அலப்பரைகள், அதே இடத்தில் அந்தக் கார் தன் மனைவியின் ஞாபகமாய் வைத்திருப்பதாக சொல்லியபடியே எமோஷனல் ஆகி விட்டி டாபிக் மாற்றுவது என்று பலக் காட்சிகளை அநாயசமாக செய்து/ சொல்லியபடி ரசிக்க வைக்கிறார்..

கௌதம் கார்த்திக்கு இரண்டாவது பாதியில் கொஞ்சம் மெனக்கெட்டு நடிக்க வேண்டிய ரோல், முடிந்த வரை அதை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி முதல் பார்வையில் ஹீரோயினுடன் காதலில் விழுவது, நண்பனுடன் காமெடி, கொஞ்சம் ஃபைட் என அதே வழக்கமான வேலைதான். பிகினியில் பீச்சில் ஆடுவதுடன், ஹீரோவுக்கு உதவும் சில காட்சிகள் என ரெஜினாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் தனிக் கவனம் பெறுகிறார்.

மேற்படி மூவரை விட வரலட்சுமியின் ரோல் ரொம்ப புதுசா இருந்தது. அதிலும் இதில் தனது கேர்க்டருக்கு பொருந்தும் வகையில் நிதானமாகப் பேசி அசத்துகிறார். அதிலும் கார்த்திக் & வரலட்சுமிகுமான ரிலேஷன்ஷிப்பை குறிப்பிடாமல் கதையை கொண்டு சதீஷின் காமெடி சிரிப்பைத் தரவில்லை , போலீஸ் அதிகாரி விஜி சந்திரசேகர், வில்லனின் கை ஆள் ’மைம்’ கோபி ஆகியோரும் இருக்கின்றனர்.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு ரொம்ப நல்லா இருக்கிறது. சாம் சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு தேவையான த்ரில்லை கொடுக்கிறது . சில்வாவின் சண்டைக் காட்சிகள் நம்பும்படியாக வடிவமைப்பட்டிருக்கிறது. குறிப்பாக கௌதம் கார்த்திக் – சந்தோஷ் பிரதாப் இடையேயான க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி அதிரடி.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட மாத்திரி ஜாலி, பாசம், லவ், கொலை, சஸ்பென்ஸ், பழிக்குப் பழி என கூட்டஞ்சோறாக வழங்கி இருப்பது டேஸ்டாக இருக்கிறதுதான். ஆனால் இண்டர்வெல் வரை படம் போகும் போக்கே வெட்டியாகப் பட்டது. மேலும் தற்போது பல தரப்பினராலும் உபயோகிக்கப்படும் வாடகை கார் நிறுவனத்தின் (கேம்ப்ஸ் ஓனர்ஸ்) முதலாளிகளுக்கு நடுவே நிகழும் தொழில் போட்டியை மையப்படுத்தி பின்னப்பட்ட கதையை இன்னும் சுவைப்பட படைத்திருக்கலாம் என்றாலும் குடும்பத்தோடு சகலரும் பார்த்து திருப்தி அடையும் வகையில் இருக்கிறார் – மிஸ்டர். சந்திரமெளலி

மார்க் 5 / 3.25

error: Content is protected !!