பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் அடுத்த ஆண்டு இந்தியா வருகை

குவிங்டவோ
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனாவில் உள்ள கிங்தாவோ நகருக்கு சென்ற பிரதமர் மோடி மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றியும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
இதில், கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் வுகான் நகரில் சந்தித்துப் பேசியது போல், மீண்டும் சந்தித்து பேசுவதற்காக வரும் 2019 ஆண்டு இந்தியாவுக்கு வருமாறு அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியின் அழைப்பை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏற்றுக்கொண்டார்.
இந்த தகவலை வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நிரூபர்களிடம் தெரிவித்தார். எனினும் சீன அதிபர் எப்பொழுது இந்தியா வருகிறார். இருநாட்டுத் தலைவர்களும் இந்தியாவில் எந்த தேதியில் சந்தித்து பேசவுள்ளனர் என்பது பற்றி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய சீன் அதிபர் ஜி ஜின்பிங், ”இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் அதிபர் மன்மூன் ஹுசெய்னும் இங்கு ஒன்றாக இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இணைந்துள்ளது இந்த குழுவின் வலிமையை மேலும் பெருக்குவதாக அமையும்” என்று கூறினார்

மதித்து செயலாற்றுங்கள்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குடிமக்களுக்கு பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, மண்டல தொடர்பு, ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் இறையாண்மை ஆகியவை உறுதி செய்யப்படவேண்டும், இவை மக்களுக்கு உறுதி செய்யப்பட்டால் மக்களுக்கு தாங்கள பாதுகாப்பாக இருப்பதாக உணரவு ஏற்படும். என மோடி குறிப்பிட்டார், இதனை அனைத்து உறுப்பு நாடுகளும் மதித்து செயல்படவேண்டும் என்று பிரதம்ர் மோடி கேட்டுக்கொண்டார்.
”புவியியலின் வரையறையை டிஜிட்டல் தொடர்பு மாற்றி வருகிறது. ஆகவே, நமது அண்டை நாடுகள் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு நாடுகளுடன் நிலையான தொடர்பினைப் பராமரிப்பதில் இந்தியா கவனமாக இருக்கிறது.
இந்தியாவில் புத்த திருவிழா
”நமது கலாசார பகிர்வை பற்றிய விழிப்புணர்வை அதிகரித்து சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பு மடங்காக ஆக்கலாம். இதற்காக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உணவு திருவிழா மற்றும் புத்த திருவிழா ஒன்றையும் இந்தியாவில் நடத்த உள்ளோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு உதாரணமான நாடு
”பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு ஆப்கானிஸ்தான் நாடு துரதிர்ஷ்டவசமான உதாரணமாகும். அங்கு அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு அதிபர் அஷ்ரப் ஞானி எடுத்து வரும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பிராந்திய நாடுகளும் அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும்” என்று அந்நாட்டு அதிபர் அஷ்ரபிற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.