5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு – டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு – டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

ரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்துடன் மத்திய பாஜக அரசின் மூவ் இருந்த நிலையில் மட்டுமின்றி நம் நாட்டில் நடக்க இருந்த ஐந்து மாநில தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறவிருக்கிறது என்பதாலும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஐந்து மாநிலங்களிலும் நவம்பரில் வாக்குப்பதிவு நடத்தி, டிசம்பரில் தேர்தல் முடிவுகளை வெளியிடும் வகையில், அதிகாரபூர்வ தேர்தல் அட்டவணையை வெளியிட்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தலைமைதான ஆட்சியும், மத்தியப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியும், தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமதி தலைமையிலான ஆட்சியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான ஆட்சியும் நடைபெற்று வருகிறது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைகிறது.. இதை அடுத்து புதுடெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தார்.

இதன்படி நவம்பர் 7-ம் தேதி தேர்தல்கள் தொடங்கி நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடையும். 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை வருகிற டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகள் கொண்ட மிஜோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ம் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 7-ம் தேதி முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக நவம்பர் 17-ம் தேதி 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் ஆண் வாக்காளர்கள் 8.2 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 7.8 கோடி பேரும் உள்ளனர். இந்த தேர்ல்களைல் முதல் முறையாக 60.2 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 5 மாநிலங்களில் உள்ள 679 தொகுதிகளுக்கு 1.77 லட்சம் வாக்குச் சாகுபடிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த அறிவிப்பு சந்திப்பின்போது தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!