32°C
விளம்பரம்
Advertisement

மீம்ஸ் பாய் சம்பாத்தியம் இப்போ எம்புட்டுன்னு தெரியுமா?

admin சேலம் Published: March 30, 2017 2 நிமிட வாசிப்பு Updated: March 31, 2017 வழிகாட்டி
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



தற்போது மீம்ஸ் இணையதளங்களில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஒரு புரட்சி செய்கிறது என்றே சொல்லலாம். நொடிக்கு நொடி மாறும் நடப்பு நிகழ்வுகள், அரசியல் அதிரடிகள், காரசார விவாதங்கள் குறித்து போட்டோ/ வீடியோ மீம்களாக உருமாற்றிக் கருத்துச் சொல்லும் நபர்கள் ஆரம்பத்தில் கலாய்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்தவர்கள் தற்போது ஐடி பணியாளர்களுக்கு இணையாகச் சம்பாதிக்கிறார்கள் என்று சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும்.

meems mar 31

இந்த துறையின் தற்போதைய ட்ரெண்ட் குறித்து விளம்பரப் படங்கள், சினிமா படங்கள், நிகழ்ச்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் நிறுவனமான ‘த சைட் மீடியா’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லோகேஷ் ஜெய் சொன்னது இது: ”மீம் பொறியாளர் என்ற பதவியை நாங்கள்தான் முதன்முதலாக அறிமுகம் செய்தோம். நம்மிடையே இயந்திரவியல், கட்டிடவியல், மின்னியல், மின்னணுவியல், ஐடி என ஏராளமான துறை பொறியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் தங்களின் கருத்துகளையும், யோசனைகளையும், பார்வையையும் மீம் வழியாகச் சமூகத்துக்குத் தெரிவிக்கும் மீம் பொறியாளர்கள் இல்லை. அதை உருவாக்க ஆசைப்பட்டேன்.

மீம் பொறியாளர்கள் வேலைக்குத் தேவை என்று சமூக ஊடகங்களிலேயே மீம் ஒன்றைப் பதிவு செய்தோம். தமிழகம் முழுக்கவிருந்து சுமார் 100 ரெஸ்யூம்கள் குவிந்தன. அதில் இருந்து படைப்பாற்றல், செய்திகள் சார்ந்து இயங்கும் ஆர்வம், உடனடியாக, வித்தியாசமாகச் சிந்திப்பது ஆகிய திறமைகளை அடிப்படையாகக் கொண்டு மீம் பொறியாளர்களைத்
தற்போது அரசியல், திரை உலகம், மால்கள், உணவகங்கள், விமான போக்குவரத்து என ஏகப்பட்ட இடங்களில் மீம்களின் தேவை எக்கச்சக்கமாக இருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 7 – 10 மீம்கள் உருவாக்கப்படுகின்றன. பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் நடக்கும் நாட்களில் இந்த எண்ணிக்கை 500-ஐத் தொடும்” என்றார் லோகேஷ்.

இதுகுறித்து சமூக ஊடக விளம்பர இயக்குநர் ஒருவர் பேசும்போது, ”பெரிய பிராண்டுகள் கூடத் தங்களின் தயாரிப்புகளை மீம்கள் மூலமாக விளம்பரப்படுத்தித் தரச்சொல்லி எங்களை அணுகுகின்றன. இதற்கு மீம் பொறியாளர்களின் உதவி தேவைப்படுகிறது” என்கிறார்.

மேலும் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளின் சமூக ஊடக மேலாளர்கள் மீம்களுக்காகவே பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளனர். இவர்களின் வேலையே ஒரு கட்சி தன் கருத்தைத் தெரிவிக்கும் போது, எதிர்க்கட்சி அதற்கு புதுமையான மீம்கள் மூலம் பதில் தாக்குதல் செய்வதுதான். அரசியல் வட்டாரத்தில் அவர்கள் ‘மீம் பாய்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றனர்.இவர்களுக்கு அரசியல் பற்றிய அறிவோடு, திரையுலகம் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நகைச்சுவை உணர்வு மிகுதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மீம் பொறியாளர்களின் சம்பளம் குறித்து அதிமுகவின் முன்னாள் தொழில்நுட்பத்துறை செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கூறும்போது, ”ஆரம்ப கட்டத்தில் ரூ.5,000 முதல் ரூ.18 வரை மீம் பொறியாளர்கள் சம்பாதிக்கின்றனர். அதுவே முக்கியமாக கட்டத்தில் ஒரு மீமுக்கு ரூ.25,000 வரை சென்ற நிகழ்வும் இருக்கிறது” என்கிறார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்