இந்தியாவில் இம்புட்டுதான் பெக்கர்ஸ் எண்ணிக்கையாம்! மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இம்புட்டுதான் பெக்கர்ஸ் எண்ணிக்கையாம்!  மத்திய அரசு தகவல்

இந்தியாவில் சுமார் 44.84 லட்சம் குடும்பத்தினர் வீட்டு வேலைக்காரர்களாகவும், 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாகவும் வாழ்க்கையை ஓட்டுவதாக ஒரு முன்னர் ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதனிடையே இந்தியாவில் அதிக அளவாக மேற்கு வங்காள மாநிலத்தில் 81 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருக்கின்றனர். மிக குறைந்த அளவாக லட்சத்தீவில் 2 பேர் உள்ளனர் என மத்திய அரசு இன்று கூறியுள்ளது.
begger
சமூக நீதி துறை ராஜாங்க அமைச்சர் விஜய் சம்ப்லா மாநிலங்களவையில் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், ”நாட்டில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 670 பிச்சைக்காரர்கள் இருக்கின்றனர். அவர்களில் 2.2 லட்சம் ஆண்கள் மற்றும் 1.91 லட்சம் பெண்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார். அவற்றில் மேற்கு வங்காள மாநிலம் 81 ஆயிரத்து 244 பேருடன் முதலிடத்தில் உள்ளது. இந்த வரிசையில் உத்தர பிரதேசத்தில் 65 ஆயிரத்து 835 பேர், பீகாரில் 29 ஆயிரத்து 723 பேர் மற்றும் மத்திய பிரதேசத்தில் 28 ஆயிரத்து 695 பேர் என்ற எண்ணிக்கையில் பிச்சைக்காரர்கள் உள்ளனர். அசாம், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காளத்தில் பெண் பிச்சைக்காரர்கள் ஆண்களை விட எண்ணிக்கையில் அதிகம் உள்ளனர்.

எனினும் யூனியன் பிரதேசங்களில்தான் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறைந்த பதிவை கொண்டுள்ளது. அரசாங்கத்தின் பதிவின்படி, மிக குறைந்த அளவாக லட்சத்தீவில் 2 பேர் உள்ளனர். அதனை தொடர்ந்து தாத்ரா நாகர் ஹாவேலி, டாமன் மற்றும் டையூ மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகள் ஆகிய பகுதிகளில் முறையே 19, 22 மற்றும் 56 பிச்சைக்காரர்கள் உள்ளனர். யூனியன் பிரதேசங்களில் அதிக அளவாக டெல்லியில் 2 ஆயிரத்து 187 பேர் உள்ளனர்.

அதற்கு அடுத்த இடத்தில் சண்டிகாரில் 121 பேர் உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவாக அசாமில் 22 ஆயிரத்து 116 பிச்சைக்காரர்கள் உள்ளனர். மிக குறைந்த அளவாக மிசோரமில் 53 பேர் உள்ளனர். நாட்டில் 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பிச்சையெடுப்பதற்கு எதிராக தத்து எடுக்கப்பட்டு அல்லது சட்டவிதிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.

error: Content is protected !!