ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணி அட்டவணை வெளியானது!
உலகக் கோப்பை ஒருநாள் போட்டிக்கான அட்டவணை இன்று மும்பையில் வெளியிட்டப்பட்டது. இதன்படி, உலகக் கோப்பை போட்டிகள் அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்தை எதிர்கொள்ளும் போது 2019 இறுதிப் போட்டியுடன் மீண்டும் தொடங்குகிறது. 5 முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி போட்டியை நடத்தும் இந்தியா தொடங்குகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதல் அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

மகேந்திரசிங் தோனி 2013ஆம் ஆண்டில், சாம்பியன்ஸ் டிராபியை வென்றுகொடுத்தப் பிறகு இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை.அதற்கு அடுத்த வருடத்தில், 2014ஆம் ஆண்டில் இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பைனல் வரை சென்று கோப்பையை தவறவிட்டது. அதன்பிறகு உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி அரையிறுதிவரை தான் முன்னேறியது.
2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில், அரையிறுசி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்றது. அடுத்து, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதி வரைதான் இந்திய அணி முன்னேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருமுறை பைனலுக்கு முன்னேறியும், தோற்றது.ஒருநாள் உலகக் கோப்பை தொடரைப் பொறுத்தவரை 2011ஆம் ஆண்டுமுதல், தொடரை நடத்தும் நாடுகள்தான் வென்றிருக்கிறது. 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இந்தியாவும், அடுத்து 2016-ல் ஆஸ்திரேலியாவில், 2019-ல் இங்கிலாந்தும் சொந்த நாட்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் கோப்பை வென்றிருக்கிறது.

தற்போது, 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி நடத்துவதால், இந்தியாதான் கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.இந்நிலையில்தான், இந்த 2023 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது
இந்திய அணி பங்கேற்க உள்ள போட்டிகளுக்கான அட்டவணை இதோ:
IND vs AUS, அக்டோபர் 8, சென்னை
IND vs AFG, அக்டோபர் 11, டெல்லி
IND vs PAK, அக்டோபர் 15, அகமதாபாத்
IND vs BAN, அக்டோபர் 19, புனே
IND vs NZ, அக்டோபர் 22, தர்மசாலா
IND vs ENG, அக்டோபர் 29, லக்னோ
IND vs குவாலிஃபையர் 2, நவம்பர் 2, மும்பை
IND vs SA, நவம்பர் 5, கொல்கத்தா
IND vs குவாலிஃபையர் 1, நவம்பர் 11, பெங்களூரு
இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி மும்பையில் நவம்பர் 15-ம் தேதியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 16-ம் தேதியும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி நவம்பர் 19-ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.


