2023 கூகுள் தேடல் – என்னென்ன? – முழு விபரம்!
தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படும் அளவுக்கு அது முன்னணி தேடியந்திரமாக மாறி விட்ட கூகுள் இல்லையென்றால் இப்போது யாரும் எதையும் பார்க்க முடியாது என்ற நிலை தான் பெரும்பாலான பயனர்களுக்கு. அவர்கள், சிலர் தங்கள் இன்ஷியல் என்ன என்பதைக் கூட கூகுள்-ஐ பயன்படுத்திதான், அறிந்துக் கொள்ள வேண்டும் என்று கிண்டலடிக்கும் போக்கே நிலவுகிறது. அப்பேர்ப்பட்ட கூகுள் நிறுவனம் அதன் வலைத்தளத்தில் அதிகமானோர் தேடிய ‘டாப் – 10’ தகவல்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும். அந்தவகையில், கூகுளை நிறுவனம் தற்போது பல வகைகளாகப் பிரித்து டாப்-10 பட்டியலை வெளியிட்டுள்ளது. அதைப் பற்றிப் பார்ப்போம்.
டாப்-10 நிகழ்வுகள் :
1. சந்திரயான்-3
2. கர்நாடக தேர்தல் முடிவுகள்
3. இஸ்ரேல் செய்திகள்
4. சதீஷ் கௌசிக்
5. பட்ஜெட் 2023
6. துருக்கி நிலநடுக்கம்
7. அதிக் அகமது
8. மேத்யூ பெர்ரி
9. மணிப்பூர் செய்திகள்
10.ஒடிசா ரயில் விபத்து
டாப்-10 தேடல்கள் :
1. ஜி20 என்றால் என்ன ?
2. UCC என்றால் என்ன ?
3. ChatGPT என்றால் என்ன ?
4. ஹமாஸ் என்றால் என்ன?
5. 28 செப்டம்பர் 2023 அன்று என்ன ?
6. சந்திரயான் 3 என்றால் என்ன?
7. த்ரெட்ஸ் என்றால் என்ன?
8. கிரிக்கெட்டில் என்ன நேரம் முடிந்தது?
9. ஐபிஎல்-லில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்றால் என்ன?
10. செங்கோல் என்றால் என்ன?
டாப் -10 விளையாட்டு நிகழ்வுகள் :
1. இந்தியன் பிரீமியர் லீக்
2. கிரிக்கெட் உலகக் கோப்பை
3. ஆசியக் கோப்பை
4. பெண்கள் பிரீமியர் லீக்
5. ஆசிய விளையாட்டு
6. இந்தியன் சூப்பர் லீக்
7. பாகிஸ்தான் சூப்பர் லீக்
8. ஆஷஸ்
9. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை
10.SA20
2023-ல் அதிகம் தேடப்பட்ட நபர்கள்:
அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் டாமர் ஹம்லின்
அமெரிக்க நடிகர் ஜெர்மி ரென்னர்
ஆண்ட்ரூ டாடே – முன்னாள் குத்துச்சண்டை வீரர்
கிலியன் எம்பாபே – பிரான்சு கால்பந்து வீரர்
டிராவிஸ் கெல்ஸ் – அமெரிக்க கால்பந்து வீரர்
கோ
2023-ல் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள்:
ஜெர்மி ரென்னர்
ஜென்னா ஒர்டேகா
இச்சிகாவா என்னோசுகே
டேனி மாஸ்டர்சன்
பெட்ரோ பாஸ்கல்
2023-ல் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள்:
டாமர் ஹம்லின்
கிலியன் எம்பாபே
டிராவிஸ் கெல்ஸ்
ஜா மோரண்ட்
ஹார்ர் கேன்
2023-ல் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்:
பார்பி
ஒப்பன்ஹெய்மர்
ஜவான்
சவுண்ட் ஆஃப் பிரீடம்
ஜான் விக்: சேப்டர் 4
2023-ல் அதிகம் தேடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
தி லாஸ்ட் ஆஃப் அஸ்
வெட்னஸ்டே
ஜின்னி & ஜார்ஜியா
ஒன் பீஸ்
கலைடேஸ்கோப்
2023-ல் அதிகம் தேடப்பட்ட இசைக்கலைஞர்கள்:
ஷகிரா
ஜேசன் அல்டீன்
ஜோ ஜோனாஸ்
ஸ்மாஷ் மவுத்
பெப்பினோ டி கேப்ரி
அத்துடன் ‘ஹவ் டூ’ (எப்படி) என்ற வார்த்தையுடன் தொடங்கும் கேள்விகள் பிரிவில் தொழில்நுட்பம் மற்றும் உடல் நலன் சார்ந்த கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டுள்ளன. குறிப்பாக சூரிய வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பது எப்படி என்ற கேள்வி அதிகம் கேட்கப்பட்டுள்ளது. அதேபோல ‘யூ டியூப் தளத்தில் எனக்கான முதல் 5 ஆயிரம் பின்தொடர்பாளர்களை பெறுவது எப்படி’ என்ற கேள்வி அதிகமாக கேட்கப்பட்டுள்ளது.
இது தவிர வாட்ஸ் அப் சேனல் உருவாக்கம், கார் மைலேஜ் அதிகரிப்பு, காஞ்சிவரம் பட்டுப் புடவைகள் குறித்த தேடல்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. அதிகம் கேட்கப்பட்ட சில கேள்விகளை இப்போது பார்க்கலாம்.
மேலும் 2023 ஆம் ஆண்டில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட மக்கள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதையும் கூகுளில் தேடியுள்ளனர். கீழே 2023 ஆம் ஆண்டில் மலச்சிக்கலுக்காக கூகுளில் அதிகம் தேடப்பட்ட சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
1. அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்
2023-ல் மலச்சிக்கலுக்காக அதிகம் தேடப்பட்ட உணவு தான் நார்ச்சத்துள்ள உணவு. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், அது குடலியக்கத்தை ஊக்குவித்து, குடலில் சேரும் அதிகப்படியான கழிவுகளை எளிதில் நகரச் செய்து, சிரமமின்றி வெளியேற வழிவகை செய்யும்.
2. சிட்ரஸ் பழங்கள்
மலச்சிக்கலில் நிவாரணம் பெற கூகுளில் தேடிய போது கூகுள் பரிந்துரைத்த மற்றொரு உணவுப் பொருள் தான் சிட்ரஸ் பழங்கள். சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருப்பதைத் தவிர, கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் பெக்டின் வடிவிலும் உள்ளன. இந்த கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஒரு மலமிளக்கியாக செயல்பட்டு, குடலில் மலம் அதிகம் தேங்கவிடாமல் தடுப்பதோடு, எளிதில் செரிமான பாதை வழியாக நகர்ந்து செல்லவும் உதவுகின்றன. எனவே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஆரஞ்சு, கிரேப்ஃபுரூட், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது நல்லது. இந்த பழங்கள் மலச்சிக்கலைத் தடுப்பதோடு, செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
3. சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள்
2023-ல் மலச்சிக்கலுக்கு தேடப்பட்ட மற்றொரு உணவு தான் சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள். இவ்விரு விதைகளும் கரையக்கூடிய மற்றும் கரையாத சத்துக்களை அதிகம் கொண்டவை. இந்த விதைகளை உட்கொள்வதன் மூலம், செரிமான மண்டலத்தின் செயல்பாடு தூண்டப்பட்டு, குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
4. அத்திப்பழம்
அத்திப்பழம் நார்ச்சத்தை அதிகம் கொண்ட மற்றொரு பாம். இந்த பழத்தை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் இது இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகிறது. சொல்லப்போனால் வயிறு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு இப்பழம் ஒரு தீர்வாகும். இந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் உட்கொள்ள வேண்டும்.
5. பச்சை இலை காய்கறிகள்
கீரைகள், காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளன. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இந்த வகை காய்கறிகளை உட்கொண்டு வந்தால், அது குடலில் சேரும் கழிவுகளை எளிதில் செரிமான பாதையில் பயணித்து சிரமமின்றி வெளியேற்ற உதவி புரியும்.
6. ஆப்பிள் மற்றும் பேரிக்காய்
ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றில் நீர்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளன. இந்த பழங்களை உட்கொண்டு வந்தால், அவை செரிமான செயல்பாட்டை ஊக்குவித்து, மலச்சிக்கலைத் தடுக்கும். அதுவும் இவ்விரு பழங்களையும் தோலுடன் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அவற்றின் தோலில் தான் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. முக்கியமாக இந்த பழங்களில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இவை சீரான குடலியக்கத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
நிலவளம் ரெங்கராஜன்