கிராமப்புற வங்கிகளில் 13,217 காலிப் பணியிடங்கள்: IBPS வெளியிட்ட மெகா அறிவிப்பு!
வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS), நாடு முழுவதும் உள்ள கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. தமிழ்நாடு கிராம வங்கியில் மட்டும் 688 காலிப் பணியிடங்கள் உள்ளன.

பதவிகள் மற்றும் காலிப் பணியிடங்கள்
இந்த அறிவிப்பில் பல்வேறு தகுதிகளுடன் கூடிய பதவிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் விவரங்கள்:
- அலுவலக உதவியாளர்: 7,972 பணியிடங்கள்
- அதிகாரி (Scale-I): 3,907 பணியிடங்கள்
- அதிகாரி (Scale-II): 1,139 பணியிடங்கள்
- அதிகாரி (Scale-III): 199 பணியிடங்கள்
- மொத்தம்: 13,217 பணியிடங்கள்
வயது வரம்பு (01.09.2025 நிலவரப்படி)
- அலுவலக உதவியாளர்: 18 முதல் 28 வயது வரை (02.09.1997-க்கு முன்னரும், 01.09.2007-க்கு பின்னரும் பிறந்திருக்கக் கூடாது).
- அதிகாரி (Scale-I): 18 முதல் 30 வயது வரை (02.09.1995-க்கு முன்னரும், 01.09.2007-க்கு பின்னரும் பிறந்திருக்கக் கூடாது).
- அதிகாரி (Scale-II): 21 முதல் 32 வயது வரை (02.09.1993-க்கு முன்னரும், 01.09.2004-க்கு பின்னரும் பிறந்திருக்கக் கூடாது).
- அதிகாரி (Scale-III): 21 முதல் 40 வயது வரை (02.09.1985-க்கு முன்னரும், 01.09.2004-க்கு பின்னரும் பிறந்திருக்கக் கூடாது).
- அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
கல்வித் தகுதி (21.09.2025 நிலவரப்படி)
- அலுவலக உதவியாளர்: ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழி மற்றும் கணினி அறிவு அவசியம். அனுபவம் தேவையில்லை.
- அதிகாரி (Scale-I): ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழி மற்றும் கணினி அறிவு அவசியம். வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம் மற்றும் கணக்குத் துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனுபவம் தேவையில்லை.
- அதிகாரி (Scale-II): இளங்கலைப் பட்டத்துடன், வங்கி அல்லது நிதித் துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சி.ஏ., சட்டம், எம்.பி.ஏ, மார்க்கெட்டிங் அல்லது வேளாண் படிப்புகள் படித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு. குறிப்பிட்ட துறை சார்ந்த பணியிடங்களுக்கு, அந்த துறைகளில் 50% மதிப்பெண்களுடன் பட்டம் மற்றும் 1 ஆண்டு அனுபவம் தேவை.
- அதிகாரி (Scale-III): ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்துடன், 5 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
தேர்வு முறை
தேர்வு முறை பதவிக்கு ஏற்ப மாறுபடும்.
- அலுவலக உதவியாளர்: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு.
- அதிகாரி (Scale-I): முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல்.
- அதிகாரி (Scale-II & III): ஒரே ஒரு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடையோர் https://www.ibps.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 850, எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 175.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21, 2025.
- முதல்நிலைத் தேர்வு: நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க: https://www.ibps.in/…/CRP-RRBs-XIV_Final_AD_1.9.25.pdf
இந்த அறிய வாய்ப்பை தமிழ்நாட்டிலுள்ள விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


