உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்!- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்!- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

பாஜக சார்பிலான பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019-ம் ஆண்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து, 103-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தது. ஆனால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும்முறை அரசியலமைப்பில் இல்லை என்று கூறி யூத் ஃபார் ஈகுவாலிட்டி என்ற அமைப்பு, அரசியல் கட்சிகள், தனிநபர்கள் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

பல்வேறு ஐகோர்ட்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம் செய்து, தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது. யூத் ஃபார் ஈகுவாலிட்டி, தமிழ் நாடு, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள், திமுக, விசிக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தரப்பில் வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதன் வாதங்கள் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 3 நீதிபதிகள் 10% இடஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி ஆகிய 4 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் நீதிபதி ரவீந்திர பட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பிற்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் ஆதரவு தெரிவித்தார்.

எனவே உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை பல இடஒதுக்கீடு வழக்குகளை விசாரித்துள்ள சுப்ரீம் கோர்ட் , பல வழக்குகளில் இடஒதுக்கீட்டை ஏற்க மறுத்து ரத்து செய்துள்ள நிலையில், தற்போது உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை ஆதரித்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தீர்ப்பு காரணமாக, மாநில அரசுகள், தங்களது விரும்பம்போல இடஒதுக்கீடு வழங்குவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!