🦉தென்கச்சி கோ. சுவாமி நாதன் 😢மறைந்த தினம்🐾

🦉தென்கச்சி கோ. சுவாமி நாதன் 😢மறைந்த தினம்🐾

சென்னை வானொலியில் இன்று ஒரு தகவல் என்னும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியை தொடர்ந்து பல ஆண்டுகள் வழங்கியவர் தென்கச்சி சுவாமிநாதன்.

அது ஒலிபரப்பான காலகட்டத்தில் அதை கேட்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு, அந்நிகழ்ச்சி புகழ் பெற்று விளங்கியது. அதில் தினம் தினம் புதுப்புது தகவல்களை சொ‌ல்வதுட‌ன், அ‌த‌ற்கு முடிவாக ஒரு நகை‌ச்சுவை கல‌ந்த கதையையு‌ம் கூ‌றி இ‌ன்று ஒரு‌  தகவலைச் சொல்லி முடி‌ப்பா‌ர். அவ‌ர் தொகு‌த்து வழ‌ங்கு‌ம் ‌‌வித‌ம் அவரு‌க்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.முக‌ம் அ‌றியா கு‌யி‌லி‌ன் நாத‌த்‌‌தி‌ற்கு நா‌ம் மெ‌ய் மற‌ப்பது போல, முக‌ம் தெ‌ரியாத அ‌ந்த கால‌க்க‌ட்ட‌த்‌திலேயே தெ‌ன்க‌ச்‌சி சுவா‌மிநாதனு‌க்கு ஏராளமான ர‌சிக‌ர்க‌ள் இரு‌ந்தன‌ர். அவரது கதைகளை குழ‌ந்தைக‌ள் முத‌ல் பெ‌ரியவ‌ர்க‌ள் வரை அனைவரு‌ம் கே‌ட்டு பய‌ன்பெ‌ற்றன‌ர்.ஒ‌வ்வொரு தகவலு‌ம் ர‌த்‌தின‌ச் சுறு‌க்கமாகவு‌ம், கடை‌சியாக‌ச் சொ‌ல்லு‌ம் கதை ‌சி‌ந்‌தி‌க்க வை‌ப்பதாகவு‌ம் இரு‌க்கு‌ம்.தினமு‌ம் ஒரு தகவலை‌க் கூட‌த் தேடி‌விடலா‌ம். ‌தினமு‌ம் ஒரு கதையை எ‌ங்குதா‌ன் தேடுவாரோ எ‌ன்று ஊரெ‌ல்லா‌ம் ஆ‌ச்ச‌ரிய‌‌ப்ப‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அந்த “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சி உருவானதே ஒரு சுவாரசியமான சம்பவம். அது குறித்து தென்கச்சி சுவாமிநாதன் கூறியதை காது கொடுத்து கேட்கலாம்.

 “சென்னை வானொலியில் வேலை பார்த்த சமயம் ஒரு நாள் கேன்டீனுக்கு சாப்பிடச் சென்றேன்.

அப்போது சக ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது “இனி நீங்கள் ரேடியோவுல சிரமப்பட்டு நிகழ்ச்சிகளை தயார் செய்ய வேண்டாம். ஏனா தொலைக்காட்சி வந்து விட்டது. எல்லாரும் அதைத்தான் பார்க்கப் போறாங்க… நாம ஒண்ணும் அதிகமா சிரமப்பட வேண்டாம்…” என்று வேடிக்கையா சொல்லிக்கிட்டு இருந்தேன்.

இது எப்படியோ எங்கள் இயக்குனர் காதுக்கு போயிட்டுது. உடனே அவர் என்னைக் கூப்பிட்டு “இது மாதிரி பேசிக்கிட்டு இருந்தியாமே” என்றார்.

“ஆமா” சார் என்றேன்.

“நாளையில இருந்து தினமும் காலையில ஒரு ஐந்து நிமிசம் நேரத்தை ஒதுக்கி தர்றோம். ஜனங்களுக்கு உபயோகமான ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லுனு” கூறினார்.

தவளை தன் வாயால கெடும்னு சொல்லுவாங்களே… அப்படி ஆயிட்டுது என்னோட நெலம… அவர், ஆரம்பிக்கும் போதே “இன்று ஒரு தகவல்”ன்னு ஆரம்பிக்கலாம், தினமும் அஞ்சு நிமிஷம் பேசுன்னார்.

அப்போது விவசாய ஒலிப்பரப்பின் பொறுப்பாளராகவும் நான் இருந்ததால், தினமும் இந்த நிகழ்ச்சியை தயாரிப்பது சிரமாக இருக்கும். அதனால வாரத்துக்கு ஒரு நிகழ்ச்சின்னு வச்சிக்கலாமே என்றேன்.

அதற்கு அவர், இல்ல இல்ல… நீயே தொடர்ந்து சொல்ல வேண்டாம். ஒரு மாதம் சொன்னால் போதும். அடுத்த மாசத்துக்கு வேறொரு பொறுப்பாளரை நியமிச்சுடலாம்… அப்படின்னு சொல்லிதான் அந்த பொறுப்பை எங்கிட்ட ஒப்படைச்சார்.

1988 ஜூலை முதல் தேதி இதை தொடங்கினோம். ஜூலை 30-ம் தேதி கடைசி நேரத்தில இயக்குனரிடம் கிட்ட போய் சொன்னேன். என்னோட கடமை முடிஞ்சுது. அடுத்தவரை ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.

அப்ப அய்யய்யோ… நான் மறந்துட்டேனே. திடீர்னு இந்த நிகழ்ச்சியை வேறு ஒருத்தர் கிட்ட ஒப்படைச்சோம்னா அவர் சிரமப்படுவார். அதனால ஆகஸ்ட் மாதமும் நீயே சொல்லிக்கிட்டு வா… செப்டம்பர்ல மாத்திக்கிடலாம் என்றார்.

வேறு வழியில்லாததால் ஒத்துக்கிட்டு வந்தேன். இந்த முறை ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்தே எனக்கு சுதந்திரம் கொடுங்க, எனக்கு சுதந்திரம் கொடுங்கன்னு… சொல்ல ஆரம்பிச்சேன்.

அவரு என்ன பண்ணினார்… 28-ம் தேதி வாக்கில் என்னை கூப்பிட்டு சிற்றுண்டி வாங்கி கொடுத்தார். ஒரு இயக்குனர் ஊழியருக்கு வாங்கி கொடுப்பது ரொம்ப ஆச்சரியம். எதுக்கு இப்படி வாங்கிக் கொடுக்கிறார் என்று யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.

வெளியில போகுற இடமெல்லாம் “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சி நல்லா இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதனால நீயே இதைத் தொடர்ந்து பண்ணினா நல்லா இருக்கும்… அப்படின்னு சொல்லி தொடரதுக்காக அந்த ரெண்டு வடையும் ஒரு டீயும் வாங்கி கொடுத்தார்.

அந்த வடைக்கும் டீக்கும் நன்றியுள்ளவனாக இதுவரை 14 ஆண்டுகள் சொல்லிக்கிட்டு இருக்கேன். தொடர்ந்து சொல்ல சிரமமா இருக்கும்… நீ எப்ப வேண்டாம்னு சொல்லுறியோ அப்ப நிறுத்திக்கலாம் என்றார்.

நான் வேண்டாம்னு சொல்ற கட்டத்துக்கு வரும் போது அவர் டிரான்ஸ்பராகி சென்றுவிட்டார். அதனால அதையும் சொல்ல முடியல.

ஆரம்பத்துல இது சுமையா தெரிஞ்சது. ஏனா ஒரே நிகழ்ச்சியை தினந்தோறும் சொல்ல வேண்டி இருக்குதுன்னு… அப்புறம் அது சுகமா போச்சு. ஏன்னா அது பழக்கப்பட்டு போச்சு.

அதுக்கு இடையில பார்வையற்றவர்கள் எல்லாம் என்னை தேடிவர ஆரம்பிச்சாங்க. அது யாரு இன்று ஒரு தகவல் சொல்றவர்னு? என்னை தடவி பார்க்கிறது… முகத்தை தடவி பார்க்கிறது… அப்படி ஒரு ஆர்வம் அவர்களுக்கு. என்னனு கேட்டா, எங்களுக்கு பல புத்தகங்களை படிக்கிறதுக்கு சாத்தியமில்ல.

எங்களுக்காக நீங்க பல புத்தகங்கள படிச்சுட்டு சொல்லுறீங்க… அதனால இதை நிறுத்திடாதீங்க சார். தொடர்ந்து நடத்தனும்னு சொல்லி… அவர்கள் தான் எனக்கு ஊக்கம் கொடுத்தாங்க. அதனால இதனை உற்சாகத்தோடு செய்ய ஆரம்பிச்சிட்டேன்.”

தென்கச்சியார் நினைவாக அவ்ர் ஒரு கூட்டத்தில் நகைச் சுவை உணர்வு என்ற தலைப்பில் பேசிய ஒரு கதையுடன் சில பதிவுகள்:!

நகைச்சுவை உணர்வு மனிதர்களுக்கு தான் உள்ளது. மிருகங்களுக்கு கிடையாது இல்லையா? .இதனால் வருத்தம் அடைந்த அனைத்து மிருகங்களும் ஒன்று சேர்ந்து நமக்கும் நகைசுவை உணர்வு வரவேண்டும். அதற்கான அனைத்து மிருகங்களும் ஒரு நகை சுவை கூறவேண்டும். அதை கேட்டு எல்லா மிருகங்களும் சிரிக்கவேண்டும் என போட்டி வைத்தது.

சிங்கம் அதற்கு தலைமை தாங்கியது.

மிருகம் சொல்லும் நகை சுவையை கேட்ட உடன் அனைத்து விலங்குகளும் சிரிக்க வேண்டும் .அப்படி சிரிக்காவிட்டால் நகைச்சுவை கூறும், மிருகத்துக்கு ஒரு அடி கொடுப்பது என்பது போட்டி ஆகும்.

குரங்கு முதலில் வந்து ஒரு கதை கூறியது. அதை கேட்டதும் அனைத்து விலங்குகளும் சிரித்தது.ஆனால் ஆமை மட்டும் சிரிக்கவில்லை. எனவே குரங்கிற்கு ஒரு அடி விழுந்தது.

பின்னர் ஒட்டகம் வந்து ஒரு நகைச்சுவை கூறியது. அப்போதும் ஆமை சிரிக்கவில்லை. இதனால் ஒட்டகத்துக்கும் அடி விழுந்தது.

3-வது கரடி வந்தது. கரடி வந்து நின்றதும் ஆமை சிரித்தது. கரடி ஏதும் இன்னும் கூறவேயில்லை, அதற்குள் ஏன் ஆமை சிரிக்கிறது என்று நினைத்த, சிங்கம் ஆமையை அழைத்து கரடிதான் இன்னும் நகை சுவை கூறவில்லை, அதற்குள் ஏன் சிரித்தாய் என கேட்டது.

அப்போது ஆமை, குரங்கு முதலில் வந்து பேசியது அல்லவா, அதை நினைத்து சிரித்தேன் என்றது.

அதுபோல் நாமும் மிக லேட்டாக சிரிக்ககூடாது.

*இருதய நோய்*

அதிகமாக சிரிக்கிறவர்களுக்கு இருதய நோய் வராது என்பது விஞ்ஞானிகளின் முடிவு. நாம் குழந்தையாக இருக்கும் போது, ஒரு நாளைக்கு 200 தடவை சிரிக்கிறோம். வளர்த்த பின்பு 15 தடவை தான் சிரிக்கிறோம்.

இதனால் தான் இருதய நோய் வருகிறது. பெரியவர்கள் ஆன பின்பு சிரிக்காமல் இருக்க காரணம் என்ன? நாம் நம்மைவிட பெரியவர்களை பார்த்தால், ஒரு மரியாதை, அதிகாரிகளை பார்த்தால் ஒரு மரியாதை என நினைப்பதால் அப்படியே இறுக்கமாக இருப்பதால் சிரிக்க மறந்து விடுகிறோம்.

*இடுப்பு எலும்பு*

இடுப்பு எலும்பை தொட்டதும் நமக்கு சிரிப்பு வருகிறது. இது இயற்கையின் ரகசியம். நம்மை நாமே இடுப்பை தொட்டால் சிரிப்பு வருவது கிடையாது.

நாட்டில் 2 பேருக்கு இருதய நோய் வருவது கிடையாது. ஒருவர் நரிகுறவர்கள். அவர்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். அதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் இல்லையா?!.

நரிக்குறவர்கள் பறவையை சுடுகின்றனர். அப்போது சுடப்பட்ட பறவை விழுந்தாலும் சிரிக்கிறார்கள். அது தப்பி பறந்து ஒடிவிட்டாலும் சிரிக்கிறார்கள்.அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இருதய நோய் வருவது கிடையாது.

மற்றொருவர் பைத்தியக்காரன். பைத்தியகாரனுக்கும் இருதய நோய் வருவது கிடையாது.

நாம் பிரதமராக ஆகவேண்டும் என்றால், அதை பற்றி யோசிப்போம். அரசியல் கட்சியில் சேர்ந்து வர முயற்சி செய்வோம். ஆனால் பைத்தியகாரன் நினைத்த உடன் நான்தான் பிரதமர் என கூறுவான். அவர் எதுகுறித்தும் யோசிப்பது கிடையாது. நினைத்ததை உடனே அடைந்து விடுகிறான். இதனால் அவனுக்கும் இருதய நோய் வருவருகிடையாது. வாழ்க்கை வாழ்வதற்கும், மூச்சு விடுவதற்கும் அல்லாமல், நாம் அதை கொண்டாட வேண்டும்.

மகா தத்துவம்

ஒரு முறை நண்பர் வந்து, நீங்கள் கூறும் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி தத்துவம் அல்ல அது மகா தத்துவம் என பாராட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மற்றொரு நண்பர் வந்தார். அவரிடம் இந்த தத்துவத்துக்கும், மகா தத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று கேட்டேன்.

அவர் நீங்கள் கூறுவது புரிந்தால், அது தத்துவம், புரியாவிட்டால் அது மகா தத்துவம் என்றார்.

அந்த மாதிரி வாழ்க்கையை வாழ்வதற்கு அல்லாமல், கொண்டாடுவதற்கு கற்றுக்கொள்ளவேண்டும்.

கலைவாணர் நிலைமை

கலைவாணர் ஒரு முறை உடல் நிலை சரியில்லை என டாக்டரிடம் போனார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் உனக்கு எந்த நோயும் கிடையாது என்றார்.

ஆனால் நம்ம கலைவாணர் அட ஆமாங்க வெளியில் ஒன்றும் தெரியவில்லை. உள்ளுக்குள் ஏதோ செய்கிறது என்றார். டாக்டர், அப்படி என்றால் நீ சிரிக்க கற்றுக் கொள்ளுங்க என்றார்.

அதுக்கு நம்ம ஆளு -அதான் கலைவாணர்,” சிரிக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்” என்றார். உடனே ,டாக்டர், ”ஏதாவது கலைவாணர் படம் பார். அப்போது உனக்கு சிரிப்பு வரும்” என்றார். இதைக் கேட்டு தலையாட்டி விட்டு சென்ற நம்ம பார்ட்டி மறுநாளும் டாக்டரிடம் வந்தார்.

டாக்டர், கலைவாணர் படம் பார்த்தீர்களா? உங்களுக்கு சிரிப்பு வந்ததா இல்லையா ?என்றார். வந்தவர், எனக்கு சிரிப்பே வரவில்லையே என்றார்.

டாக்டருக்கு கோபம் வந்தது. கலைவாணர் படம் பார்த்துகூட உனக்கு சிரிப்பு வரவில்லை என்றால் நீ என்ன மனிதர்? யார் நீ என்றார். வந்த நபரோ நான் தான்யா அந்த கலைவாணர் என்றார்.🤣

error: Content is protected !!