அச்சச்சோ.. கொரோனாவை விட டேஞ்சரானதாம் நிபா வைரஸ்!

அச்சச்சோ.. கொரோனாவை விட டேஞ்சரானதாம் நிபா வைரஸ்!

மிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் மக்களிடையே பரவி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்க பட்டுள்ளதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைய் 6 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இத்தாக்குதலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொற்றக்கூடிய வீதம் குறைவாக இருந்தாலும், இதன் இறப்பு வீதம் அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி இல்லாத இந்த வைரஸ், பாதிக்கப்பட்ட வெளவால்கள், பன்றிகள் அல்லது மனிதர்களின் உடல் திரவங்களுடனான தொடர்பு மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் 75% வரை உள்ளது ஆபத்தான விஷயமாகும் என்று தகவல்கள் வருகின்றன.

கேரளாவில் நிபா வைரஸ் அபாயம் தலைதூக்கியுள்ள நிலையில், இந்தியாவின் பிற மாநிலங்களும் இந்த வைரஸ் குறித்த உஷார் நிலையில் உள்ளன. மேலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கபட்டு வருகின்றன.. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் (24–ந்தேதி) வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தொற்று எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பயிற்சி மையங்கள் என அனைத்துக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோட்டைத் தவிர அண்டை மாவட்டங்களான மலப்புரம், கண்ணூர், திரிசூர், வயநாட்டிலும் நிபா தொற்று பரவியுள்ளது.

இதற்கிடையே இந்த நிபா தொற்று குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநர் ராஜீவ் பாஹல் அளித்தப் பேட்டியில், “நிபா வைரஸ் கொரோனாவைவிட ஆபத்தானது. நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் என்றால் நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் ஆக உள்ளது. மேலும் கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் தாக்கியபோது அது வவ்வால்கள் மூலமாகவே பரவியது என்பதை நாங்கள் உறுதி செய்தோம். ஆனால் இப்போது வைரஸ் பரவலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பொதுவாகவே மழைப்பருவத்தில் இந்த நோய் அதிகம் பரவுகிறது.

கடந்த முறை ஆஸ்திரேலியாவில் இருந்து ‘மோனோகுளோனல் ஆன்டிபாடி’ மருந்தை கொள்முதல் செய்திருந்தோம். தற்போது அந்த மருந்து 10 நோயாளிகளுக்கு மட்டுமே போதுமான அளவுக்கு இருக்கிறது. இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. தற்போது நிபா பரவல் அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் இருந்து மேலும் 20 டோஸ் மருந்து கொள்முதல் செய்ய இருக்கிறோம். இந்த மருந்தை தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அளிக்க வேண்டும்.

இந்த வைரஸ் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Related Posts

error: Content is protected !!