ஹீரோவின் புதிய மின் ரிக்‌ஷா!

ஹீரோவின் புதிய மின் ரிக்‌ஷா!

இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனி, பேட்டரியில் ஓடும் மூன்று சக்கர வாகனமான மின் ரிக்‌ஷா ஒன்றையும் அது வெளியிட்டு இருக்கிறது.
e rishaw
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சோஹிந்தர் கில், புது டெல்லியில் பத்திரிகையாளர்களிடம்,”ஹீரோ நிறுவனத்தின் புதிய “ராஹி’ மின்சார ரிக்‌ஷாவில் 1,000 வாட் திறனுள்ள மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 90 கி.மீ. வரை செல்லலாம். இந்திய ஆட்டோமோடிவ் ஆராய்ச்சி நிறுவனம் இந்த வாகனத்தின் செயல்பாடு குறித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த வாகனத்தில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஓட்டுநரின் செல்லிடப்பேசியை சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. நாடு முழுவதுமுள்ள எங்களது 120 விற்பனையாளர்கள் மூலம் இது உடனடியாக விற்பனைக்கு வருகிறது.

புது டெல்லியில் இதன் விலை ரூ. 1.10 லட்சம். ஹீரோ நிறுவனத்தின் மின் ஸ்கூட்டர்கள் ஏற்கெனவே விற்பனையில் உள்ளன. இதுவரை ஒரு லட்சம் மின் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளோம். தென் இந்தியாவில் நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்”என்று தெரிவித்தார்.

Related Posts