ஸ்மார்ட்ஃபோன் விலை சீப்!
2013ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 10 சதவீதம் அல்லது 9 கோடியாக உள்ள ‘ஸ்மார்ட்போன்’ எண்ணிக்கை,வரும் 2020ம் ஆண்டு 45 சதவீதம் அல்லது 52 கோடியாக உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ள நிலையில் உள்நாட்டு செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்த விலையில் ஸ்மார்ட்ஃபோன்களை தொடர்ந்து அறிமுகம் செய்வதால், சர்வதேச முன்னணி நிறுவனங்களும் மலிவு விலை ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றும் இன்டெக்ஸ், கார்பான், ஸ்பைஸ், லாவா, மைக்ரோமேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் 3 ஆயிரம் ரூபாய் முதல் ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்து வருகின்றன எனவும் தெரிய வருகிறது.
![]()
கார்பான் நிறுவனம் அண்மையில் ஆண்ட்ராய்டு கிட்காட் இயங்குதளத்தில் ஸ்மார்ட்ஃபோனை 2,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்தது. இதையடுத்து, மற்ற நிறுவனங்களும் வர்த்தகப் போட்டியால் ஸ்மார்ட்ஃபோன்கள் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மோட்டோரோலா நிறுவனத்தின் மோடோ இ என்ற நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் 7 ஆயிரம் ரூபாய்க்கு இணையதளம் மூலம் மட்டுமே விற்கப்படும் நிலையில், சாம்சங் உள்ளிட்ட மற்ற சர்வதேச முன்னணி நிறுவனங்களும் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், ஸ்மார்ட்ஃபோன்கள் 2 ஆயிரம் ரூபாய் முதலே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


