வேர்ல்ட்லேயே எக்ஸ்பன்சிவ்வான சிட்டி எது தெரியுமா?

வேர்ல்ட்லேயே  எக்ஸ்பன்சிவ்வான சிட்டி எது தெரியுமா?

உலகில் அதிக செலவாகும் நகரம் அங்கோலா நாட்டில் உள்ள லுவாண்டாதான் என்று தெரிய வந்துள்ளது சமீபத்தில் இது குறித்து ஆய்வு செய்த இசிஏ இன்டர்நேஷனல் என்ற அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் உலகின் அதிக செலவு மிக்க நகரங்கள் குறித்த சர்வேயை எடுத்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம், உலக நாடுகளில் முக்கியமான 140 நகரங்களில் சர்வே மேற்கொண்டது. இதில், அந்தந்த நகரங்களில் விற்பனையாகும் முக்கியமான 160 பொருட்களின் விலை, சேவை மற்றும் வெளிநாடு செல்லும் ஊழியர்களுக்கு தரப்படும் பயணப்படி உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு சர்வே நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.உலகின் பணக்கார நாடு என கூறப்படும் அமெரிக்காவின் ஒரு நகரம் கூட இந்த் ஆய்வு லிஸ்டில் இடம்பெறவில்லை என்பது எக்ஸ்ட்ரா இன்ஃபர்மேஷன்..
world aug 29
அதே சமயம் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, உலகிலேயே அதிக செலவாகும் நகரமாக லுவாண்டா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு பெட்ரூம் கொண்ட வீட்டின் ஒரு மாத வாடகை குறைந்தபட்சம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய் ஆகிறது. ஒரு ஜோடி சாதாரண ஜீன்ஸ் பேன்ட் வாங்க வேண்டுமானால் 15 ஆயிரத்து 600 ரூபாய் கொடுக்க வேண்டும். இப்படி செலக்ட் ஆன ஆப்ரிக்காவில் ஜாம்பியா, போட்ஸ்வானா அருகே அட்லாண்டிக் கடல் ஓரத்தில் அமைந்துள்ள நாடுதாம் அங்கோலா. ஒரு காலத்தில் போர்ச்சுக்கிசீயர்கள் ஆதிகத்தில் இருந்தது. அவர்கள் உருவாக்கியது தான் லுவாண்டா நகரம். அங்கோலாவில் ஏராளமான பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டதும், லுவாண்டா பெரு வளர்ச்சி அடைந்தது. அங்கு வசிப்போரின் செலவினங்களும் கூடின.

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஏனைய நகரங்கள்

1. லுவாண்டா (அங்கோலா)
2. ஹாங்காங் (சீனா)
3.ஜூரிச் (சுவிட்சர்லாந்து)
4.சிங்கப்பூர்
5.ஜெனீவா (சுவிட்சர்லாந்து)
6.ஷாங்கை (சீனா)
7.பெய்ஜிங் (சீனா)
8.சியோல் (தென் கொரியா)
9.பெர்ன் (சுவிட்சர்லாந்து)
10.என்ஜமீனா (சாட்)

error: Content is protected !!