தமிழ் குரல் / AI Voice
அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பாப் பாடகி லேடி ககா. இவர் உலக நாடுகளில் பாப் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் முதல் முறையாக விண்வெளியில் பாடல் பாடி இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி லேடி ககா. இவர் மேடையேறினால் மொத்த கூட்டத்தையும் எழுந்து நின்று துள்ளல் ஆட்டம் போட வைக்கிற அளவுக்கு அசத்தலாய் ஆடிக்கொண்டே பாடுகிற வசீகர பாடகி. இவரது ஆல்பங்கள் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. இசைத் துறையில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். ‘பேட் ரொமான்ஸ்’, ‘த ஃபேம் மான்ஸ்டர்’ ஆகிய ஆல்பங்களுக்காக 3 கிராமி விருதுகளை கடந்த 13&ம் தேதி பெற்றது லேட்டஸ் ட். பாடல் எழுதுவது, ஆல்பம் தயாரிப்பு, பல்வேறு பிசினஸ் ஆகியவற்றையும் சிறப்பாக செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் முதல் முறையாக விண்வெளியில் பாடல் பாடி இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்.இந்நிகழ்ச்சி வருகிற 2015–ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்தை சேர்ந்த கோடீஸ்வரர் ரிச்சர்டு பிரான்சன் ராக்கெட்டில் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்கிறார்.
அதில், பாடகி லேடி ககாவும் பங்கேற்று விண்வெளி செல்கிறார். அதைத்தொடர்ந்து அங்கு இசை நிகழ்ச்சி நடத்தி அதில் பாடுகிறார்.அதற்காக சுமார் ஒரு மாதம் பாடும் பயிற்சி மேற்கொள்கிறார். இத்தகவல் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.-
Lady Gaga plans actual space concert
