ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க நான் டிசைட் பண்ணியாச்சு: உங்க ஒப்பீனியன் இன்னா? – மோடிக்கு ஜெ. லட்டர்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க நான் டிசைட் பண்ணியாச்சு: உங்க ஒப்பீனியன் இன்னா? – மோடிக்கு ஜெ. லட்டர்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெக்ரிஷிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வி.ஸ்ரீதரன் என்ற முருகன், டி.சுதேந் திரராஜா என்ற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்ற அறிவு ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.அதைத் தொடர்ந்து அவர்களையும், இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோரையும் ஆயுள் தண்டனையில் இருந்து விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வந்தது.
raji mar 3
டெல்லி போலீஸ் சட்டப்பிரிவின்படி, புலன் விசாரணைக்காக இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததால், குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் 432-ம் பிரிவை (தண்டனை குறைப்பை மாநில அரசு மேற் கொள்ள வகை செய்யும் சட்டப்பிரிவு) அமல்படுத்த மாநில அரசு முன்வரும்போது, அதன் 435-ம் பிரிவின்படி, மத்திய அரசை அந்த மாநில அரசு கலந்து பேச வேண்டும்.அதன்படி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேரையும் விடுவிப்பதற்கு மாநில அரசு முன்வந்து, அதுதொடர்பான கருத்தை மத்திய அரசு 3 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று 19.2.2014 அன்று தமிழக அரசு உங்களுக்கு கடிதம் எழுதியது.

தண்டனை குறைப்பு தொடர்பான கருத்தை தெரிவிப்பதற்கு பதிலாக, அப்போது இருந்த மத்திய அரசு, தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவசர அவசரமாக வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.ஆனால் அந்த வழக்கில் உள்ள சட்ட அடிப்படையிலான கேள்விகளில் இருந்த முக்கியத்துவத்தை கருதி, கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வுக்கு அந்த 3 நீதிபதிகளும் அனுப்பிவைத்தனர்.

அந்த வழக்கில் எழுப்பப்பட்ட சட்ட ரீதியான கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு, மீண்டும் வழக்கை 3 நீதிபதி களின் அமர்வுக்கு விசாரணைக்காக அனுப்பிவைத்து கடந்த 2.12.15 அன்று அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. ஆனால் அந்த வழக்கு இன்னும் விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை.

இந்த நிலையில் அவர்கள் 7 பேரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருந்துவிட்டதாக கூறி, அதனால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனு கொடுத்து உள்ளனர். இதில் நளினி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து, தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளார்.இந்த 7 பேரின் மனுக்களை பரிசீலித்து, அவர்கள் அனைவருமே 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் இருந்துவிட்டதால், தண்டனையை குறைத்துவிட்டு அவர்களை விடுவிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த சூழ்நிலையில், குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் 435-ம் பிரிவின்படி, தமிழக அரசின் முடிவு தொடர்பான விஷயத்தில் மத்திய அரசின் கருத்தை கேட்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு எழுகிறது.2.12.2015 அன்று சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில், ‘‘435-ம் பிரிவில் கூறப்பட்டுள்ள ஆலோசனை என்ற வார்த்தை, தெரியப்படுத்து தல் என்பதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசின் அனுமதியைப் பெறுதல் என்ற அர்த்தத்தில் உள்ளது” என்று கூறப்பட்டு உள்ளது. இதை மறு சீராய்வு செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டை நாடுவதற்கான மாநில அரசின் உரிமை யை விட்டுத்தரவில்லை என்பதை இதன் மூலம் கூறிக்கொள்கிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே தி மு க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில்,” முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்வது என தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்டு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் இந்த ஏழு பேரும், ஏறத்தாழ இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். மேலும் கடந்த முறை தமிழக அரசு மேற்கொண்ட தவறான அணுகுமுறையால் இவர்களது விடுதலை தள்ளிப்போனது. தற்போது, தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” தெரிவித்துள்ள்ளார்

Related Posts

error: Content is protected !!