யூடியூப்-பில் 3 மில்லியன் ரசிகர்கள் கண்டுகளித்த ”ஐ” டீசர்

யூடியூப்-பில் 3 மில்லியன் ரசிகர்கள் கண்டுகளித்த ”ஐ” டீசர்

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ படம் எப்போது திரையில் வரும்? படம் எப்படி இருக்கும்? என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் திங்கள் கிழமை வெளியானது. பிரம்மிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படத்தின் உத்தியோகபூர்வ டீசரை படத்தின் இயக்குனர் சங்கர் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டார்.
i
விக்ரம்-எமி ஜாக்சன் நடித்து ஷங்கர் டைரக்டு செய்துள்ள படம், ஐ. இந்த படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா திங்கள் கிழமை அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். விழாவையட்டி, ஐ படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் நடிகர் விக்ரம் மனித உடலுடனும், மிருக தலையுடனும் கூடிய ஒரு வித்தியாசமான தோற்றத்தில் மேடையில் தோன்றி ஆடி பாடினார். ஐ படத்தின் பாடல்களை வெளியிடும் சோனி நிறுவனமும் இந்த டீசரை வெளியிட்டுள்ளது.

அதைப் பார்க்க்https://www.youtube.com/watch?v=pzTHmcXfeug

இது குறித்து சோனி நிறுவனத்தின் தலைவர் அசோக் பார்வானி கூறுகையில்; சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு யூடியூப் தளத்தில் 3 மில்லியன் ரசிகர்கள் ஐ படத்தின் டீசரை பார்த்து உள்ளனர் என்று தெரிவித்தார். இந்த படம் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் 150 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கபட்டுள்ளது க்