யூடியூப் இணையதளம் கட்டண சேவையை தொடங்கியாச்!

யூடியூப் இணையதளம்  கட்டண சேவையை தொடங்கியாச்!

முன்னெல்லாம் முன்னணி டைரக்டர்களிடம் அடியாள் ரேஞ்சுக்கு வேலைப் பார்த்து இயக்குநராவது வாடிக்கை. ஆனால் ஜஸ்ட் லைக் தட் போனில் ஒரு முழுப் படம் எடுத்து அதை யூடியூப்பில் ஏற்றி சான்ஸ் கேட்கும் போக்கு அதிகரித்துள்ளது அது மட்டுமின்றி இப்போதெல்லாம் ஒரு படம் தியேட்டரில் நன்றாக ஓடுகிறதோ இல்லையோ, . யு டியூப்பில் நன்றாக ஓடினாலே அந்தப் படம் வெற்றி பெற்று விடும் என சிலர் நம்புகிறார்கள். அதிலும் யு டியூப்பில் அதிகம் பேர் பார்த்துவிட்டார்கள் என்பதெற்கெல்லாம் வேறு விழா எடுக்கிறார்கள்
5626bfea1400006f003c8b79
இந்நிலையில்கடந்த 10 ஆண்டுகாலமாக இலவச சேவையை வழங்கி வந்த கூகுள் நிறுவனத்தின் வீடியோ சேவை யான யூடியூப் இணையதளம் இனி கட்டண சேவையை விரைவில் துவங்க உள்ளது.இந்த கட்டண சேவை மூலம் வீடியோக்களை எந்தவித விளம்பர இடையூறுகளின்றி பார்த்து ரசிக்கலாம்.இதன் முதல் கட்டண சேவை முதல் கட்டமாக அமெரிக்காவில் துவங்கப்பட உள்ளது.

பின்னர் இந்த சேவை சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று யூடியூப் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.மேலும் யூடியூப் ரெட் என்ற இந்த சேவையில், மாதம் 9.99 டாலர் பணம் (ரூ. 650) செலுத்தினால், செல்போன், கணினி, என எல்லா தளங்களிலும் விளம்பரமின்றி வீடியோக்களை பார்க்கலாம். இந்த சேவை அக்டோபர் 28 முதல் அறிமுகமாகும் என்று யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts