மெடிக்கல் செலவுக்காக நோபல் பரிசை ஏலம் விட்ட விஞ்ஞானி

மெடிக்கல் செலவுக்காக நோபல் பரிசை ஏலம் விட்ட விஞ்ஞானி

ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், வேதியியல், இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை தேர்ந்து எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.நோபல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம், ஒரு பதக்கம் மற்றும் 10 லட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.
nobel auction james
அவ்வகையில், 1998-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்ற விஞ்ஞானியான டாக்டர் லியோன் எம் லீடர்மேன் என்பவர் சில ஆண்டுகளாக நியாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடக்கிறார்.

தற்போது 92 வயது முதியவராக இருக்கும் அவரது மருத்துவ செலவுக்காக பட்ட கடனை அடைக்க முடியாமல் திண்டாடிய லியோனின் மனைவி எல்லென் என்பவர், தனது கணவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு பதக்கத்தையும், பட்டயத்தையும் ஏலத்தில்விட்டு மேற்கொண்டு சிகிச்சை செலவுக்காக நிதி திரட்ட முடிவு செய்தார்.

இதையடுத்து, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு ஏல நிறுவனம், லியோன் எம் லீடர்மேனுக்கு வழங்கப்பட்ட நோபல் பதக்கத்தை ஏலத்தில் விட்டது. சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இந்த ஏலத்தில் வியக்கத்தக்க வகையில் அந்த பதக்கம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 2 டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 5 கோடி ரூபாய்) ஏலம் போயுள்ளது.

error: Content is protected !!