முழு நீள காமெடி படமான ”வந்தா மல” – ஆல்பம்!

முழு நீள காமெடி படமான ”வந்தா மல” – ஆல்பம்!

கியிகர் புரொடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.ஜெயராதாகிருஷ்ணன் தயாரிக்கும் படத்துக்கு ‘வந்தா மல’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ், பிரியங்கா, வியட்நாம் வீடு சுந்தரம், மகாநதி சங்கர், எஸ்.ஜெயராதாகிருஷ்ணன், மலேசிய தியாகா, சவுகாந்த், மலைக்கா, திவ்யா, ராணி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இகோர் இயக்குகிறார். படம் பற்றி அவரிடம் கேட்ட போது,”சென்னையில் நான்கு இளைஞர்கள் வேலையின்றி வெட்டியாய் சுற்றித் திரிகின்றனர். சிறு சிறு குற்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் நிகழும் குழப்பங்களை காமெடியாக சித்தரிப்பதே இப்படத்தின் கதை.

எல்லோரும் முட்டாளாக இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பது படம் பார்க்கும்போது புரியும். பாட்டு, கூத்து, கும்மாளம் என முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது. கடைசி வரை சிரித்துக் கொண்டே இருக்கும்படி திரைக்கதை இருக்கும். ஆக்ஷன், காதல் போன்றவைகளும் உண்டு. சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. விரைவில் படம் ரிலீசாகிறது”என்றார்!

error: Content is protected !!