தமிழ் குரல் / AI Voice
சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,தற்போது ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,இந்நிலையில் ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது.அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதையும் மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம் என்பதையும் மற்றவர்கள் உணரும் விதத்தில் புதிய முயற்சி ஒன்றை எடுத்தார் பெரு நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரிச்சர்டு டோர்ரோர்.

அதாவது பூங்காவில் இருக்கும் மரத்திற்கு திருமண மோதிரம் அணிவித்து அந்த மரத்தையே மனைவியாக ஏற்றார். இந்த அபூர்வ நிகழ்ச்சி அர்ஜென்டினா நாட்டில் பியூனோஸ் அயர்ஸ் நகரிலுள்ள பூங்காவில் நடைபெற்றது.
முன்னதாக மணமகன் போல வெள்ளை நிற ‘டிப்–டாப்’ உடையில், தலையில் தொப்பி அணிந்து வந்த அவர் மரத்தை கட்டி அணைத்து திருமண உறுதிமொழியை எடுத்தார். தொடந்து மோதிரம் அணிவித்து பின்னர் மரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தார்.
தொடந்து இதுபற்றி அவர் கூறுகையில், ‘மக்கள் மனதில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த இதை செய்கிறேன். பெரு நாட்டிற்கு வெளியே தற்போது இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக நடத்தியிருக்கிறேன். இனி மேலும் பல தென் அமெரிக்க நாடுகளுக்கு செல்ல இருக்கிறேன்’ என்கிறார்.
வீடியோ லிங்க்::http://www.youtube.com/watch?v=HYadzFCUl2o
Man marries trees in Argentina
**************************************************
Actor Richard Torres even gave the tree a kiss after he confirmed his wedding vows and received a ring. The newly-wed tree can be found in a Buenos Aires park.Torres said he wanted the ceremony to send out an important message about looking after the environment.
