பொம்மை – விமர்சனம்!

பொம்மை – விமர்சனம்!

பைத்தியம் காதலிக்கும் குணா, பிணத்தை லவ் செய்யும் காதலில் விழுந்தேன், பொய் காதலில் வாழும் குடைக்குள் மழை என்ற காதலில் எத்தனையோ வகைகள் வந்தாலும் புது டைப்பில்லான காதல் கதை என்ற பெயரில் ராதா மோகன் வழங்கி இருக்கும் உப்பு சப்பில்லாத படமே ‘ பொம்மை’.

இப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு பொம்மை தயாரிக்கும் கம்பெனியில் பொம்மைகளுக்கு கண், உதடு, மூக்கு போன்ற வடிவங்களை வரைந்து கொடுத்து பிழைப்பு ஓட்டுபவர் ராஜ்குமார்(எஸ்.ஜே.சூர்யா). அந்த கம்பெனியில் உள்ள ஒரு பொம்மை சிறு வயதில் காணாமல்போன தனது தோழி நந்தினியை (பிரியா பவானி சங்கர்) போல இருப்பதாக கற்பனை செய்து அந்த பொம்மையுடன் பேச ஆரம்பித்து காதலிக்கவும் செய்து விடுகிறார். இதனிடையே ராஜ்குமார் இல்லாத ஒருநாளில் கம்பெனியின் மேனேஜர் அந்த பொம்மையை விற்று விடுகிறார். இதனால் கோபம் கொள்ளும் ராஜ்குமார் மேனேஜரை கொன்று விடுகிறார். கொலைக் குற்றவாளி யாரென்று தெரியாது தேடி அலையும் போலீஸிடம் எஸ் ஜே சூர்யா சிக்கினாரா.? பொம்மையை எஸ் ஜே சூர்யா கண்டு பிடித்தாரா.? கண்டுபிடித்து என்ன செய்தார்.? என்பதே பொம்மை ஸ்டோரி(யாம்)

படத்தின் மெயின் ரோல் பொம்மை தான். பிரியா பவானி சங்கர் பொம்மையாகவே வாழ்ந்து சாதித்து விட்டார். எஸ்.ஜே.சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு படத்தை தாங்குகிறது. குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் விசாரணை காட்சிகளில் நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார்.ஆனால் பல இடங்களில் ஓவர் டோஸ் ஆக்டிங் வழங்கி சலிப்பை கொடுத்து விடுகிறார்.

சூர்யா நண்பராக நடித்திருக்கும் டவுட்டு செந்தில் டம்மி பீஸ்.. முதலாளி கேரக்டரில் நடித்திருக்கும் நடிகர் ஜானகிராமன் அளவான நடிப்புடன் மலையாளம் கலந்து தமிழ் பேசும் பாங்கு க்வர்கிறது. இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி அவரது வேலையை செவ்வனே செய்துவிட்டு சென்றிருக்கிறார். இவர்களுடன் நடித்த இன்ன பிற இதர நடிகர்களும் அவரவர் வேலையை செய்திருக்கின்றனர்.

யுவனின் பின்னணி இசை சில காட்சிகளில் மட்டும் சிறப்பு. பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. அபியும் நானும், மொழி, உப்பு கருவாடு, பயணம், காற்றின் மொழி போன்ற தரமான படங்களை கொடுத்த இயக்குநர் ராதா மோகன் ஏனோ தானோவென்று உருவாக்கி நம் நேரத்தை வீணடித்து விட்டார்

மொத்தத்தில் இந்த பொம்மை ஒன்றுக்கும் உதவவில்லை

மார்க் 2.5/5

Related Posts

error: Content is protected !!