32°C
விளம்பரம்
Advertisement

ஷீலா தீட்சித்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர்.!- நீதிமன்றம் உத்தரவு

admin சேலம் Published: September 1, 2013 2 நிமிட வாசிப்பு Uncategorized
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 2008ம் ஆண்டு, தேர்தல் நேரத்தில் அரசு நிதியை தவறான முறையில் பயன்படுத்தி பிரசாரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டது. தகவல் கேட்பு ஆர்வலர் விவேக் கர்க், பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் சிறப்பு நீதிபதி நரோத்தம் கௌஷல் விசாரணை மேற்கொண்டார்.
ssep 1 heila_dikshit
இந்த இரு மனுக்களிலும் ரூ.22.56 கோடியை 2008ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியாக தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி, குற்றவியல் சட்டம் 409ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், லோக் ஆயுக்த நீதிமன்றம் முதல்வர் மீதான இந்தக் குற்றச்சட்டை குறிப்பிட வில்லை என்றும், அது குடியரசுத் தலைவருக்கு தனது ஆலோசனைகளை அளித்துள்ளதாகவும், எனவே அவரது முடிவே இதில் இறுதியானது என்றும் தில்லி அரசின் தலைமை வழக்குரைஞர் பிஎஸ் ஜூன் கூறியிருந்தார்.

Court orders FIR against Sheila Dikshit for allegedly misusing funds
**********************************************************************************
A Delhi court today ordered registration of FIR against Chief Minister Sheila Dikshit and others for allegedly misusing government funds for a 2008 pre-assembly poll advertisement campaign.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்