நானும் சிங்கிள்தான் என்னோட கதை, உங்களோட கதை, நம்மளோட கதை!- டைரக்டர் பேச்சு!

நானும் சிங்கிள்தான் என்னோட கதை, உங்களோட கதை, நம்மளோட கதை!- டைரக்டர் பேச்சு!

Three is a company production மற்றும் புன்னகை பூ கீதா இணைந்து தயாரிக்கும் படம் “ நானும் சிங்கிள் தான் “ அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் R.கோபி. இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு காமெடி நடிகர் கதிர் பேசியதாவது,

“இந்த இடத்தில் முதலில் நன்றி தான் சொல்லணும். என் குடும்பம் முதல் கார்த்தி அண்ணா வரைக்கும் நன்றி. நிறைய பேரோட அன்பும் உதவியும் இருந்தால் தான் உயர முடியும். நானும் சிங்கிள் தான் படத்தில் எனக்கு ஸ்பேஸ் கொடுத்தார் ஹீரோ தினேஷ் அண்ணா. இயக்குநர் கோபி அண்ணா முதலில் என்னை கமிட் செய்வதற்கு முன் என்னை சிங்கிளா? என்று கேட்டார். ஆமா என்றதும் சைன் போடுங்க என்றார். எங்களை எல்லாம் சிங்கிளா என்று கேட்ட இயக்குநருக்கு விரைவில் குழந்தை பிறக்க இருக்கிறது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ரொம்ப நன்றி சொல்லணும். ராஜன் சார் பேசினாலே இப்போது ட்ரெண்ட். ஜீ தமிழ் ஹெட் தமிழ்தாசன் -க்கும் நன்றி. பாஷை புரியாத எங்கள் இசை அமைப்பாளரை இந்தப்படம் பலமுறை சிரிக்க வைத்திருக்கிறது. அதனால் எங்கள் தமிழ் மக்களையும் இப்படம் சிரிக்க வைக்கும்” என்றார்.

தொகுப்பாளர், நடிகர் கிருஷ்ணா பேசியதாவது,

“இந்த மேடையில் நான் நிற்பதுக்கு 23 வருடம் தேவைப்பட்டது. அந்த வகையில் இயக்குநர் கோபி சாருக்கு நன்றி. தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியிருப்பதை சந்தோசமாக உணர்கிறேன். தினேஷ் ரொம்ப இயல்பான நடிகர். இந்தப்படத்தில் டூப் இல்லாமல் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளேன். காதலர் தின ட்ரீட்டாக இப்படம் இருக்கும். அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள்” என்றார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹெட் தமிழ்தாசன் பேசியதாவது..,

“இந்த விழாவிற்கு கோபிக்காக தான் வந்தேன். கோபி ரொம்ப ஷார்ப்பான பையன். என்னை குரு என்றார். ஆனால் குருவிற்கு முன் படம் பண்ணிட்டார். எதையும் பாஸ்டா அடாப் பண்ணிப்பார். இன்று டிவியில் இருந்து படம் பண்ண வருவது என்பது ரொம்ப கஷ்டம். அதை கோபி இலகுவாகி இருக்கிறார். படத்தில் டிரைலர் பாடல் எல்லாமே நல்லாருக்கு. அவரோட ஸ்பெசல் டயலாக். அது நல்லாருக்கும் என நினைக்கிறேன். படத்தில் எல்லாமே நன்றாக இருக்கிறது. எல்லாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது,

“,இந்தப்படத்தின் டீசர் மூலமாக இயக்குநர் கோபிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தெரிகிறது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. பல நிகழ்ச்சிகளில் இருந்து இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக இருக்கிறது. படத்தில் பங்கேற்ற வர்களை மேடையேற்றி இருக்கிறார்கள். நான் யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவேன். நல்லது செய்தால் தட்டிக் கொடுப்பேன். நான் சின்னப் படங்கள் விழாக்களை தவறவிட மாட்டேன். பெரிய படங்களுக்குச் செல்லமாட்டேன். ஹீரோயின் நடனம் மிக நன்றாக இருந்தது. இரண்டு பாட்டும் நிறைவாக இருந்தது. காஸ்டிங் இயக்குநர் சொப்னா இதை ஒரு நன்றி விழாவாக மாற்றினார். இது நல்ல விசயம் தான். நன்றி சொல்லும் உள்ளம் எல்லாருக்கும் இருக்க வேண்டும். முயற்சியும் உழைப்பும் இருந்தால் சரியான வாய்ப்பு வந்தே தீரும். அதற்கு சரியான உதாரணம் எம்.ஜி.ஆர். சம்பாதிப்பதில் 25% பொருளை ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். தம்பி கோபி இளைஞர்களை ஈர்க்கும் விதமாக படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயித்த பின்பும் அவர் தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும்.

இன்று எவ்வளவோ படங்கள் எடுத்த ஒரு நிறுவனம் ஒரு படம் கூட எடுக்க முடியாமல் இருக்கிறது. காரணம் ஒரு இயக்குநர். தயாரிப்பாளர் புன்னகை பூ கீதா சிறப்பாக இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார். ராம.நாராயணன் படம் எடுக்கும் போது நாயகனை நம்ப மாட்டார். நாய், கழுதை போன்ற மிருகங்களை நம்புவார். அதேபோல் கோபி தயாரிப்பாளர்களை காப்பாற்றும் வேலையைச் செய்யவேண்டும். நானும் சிங்கிள் தான் படத்தில் அத்தனை பேரின் உழைப்பும் அருமையாக இருக்கிறது. விஜய் படத்திற்கு 100% இருக்கைக்கு அனுமதி கொடுத்தார்கள். திடீரென்று மறுத்து விட்டார்கள். இப்போது அந்தப்படம் ஓடி ஓடிடிக்கு வந்த பிறகு 100% இருக்கைக்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். அதில் என்ன அரசியலோ தெரியல. நமக்கு அது தேவையில்லை. அரசு கொரோனா விஷயத்தில் நன்றாக நடந்து கொண்டது. அதேபோல் 8% வரியை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும் என்றார்.

படத்தின் இயக்குநர் R. கோபி பேசியதாவது,

“எனக்கு குரு என்றால் தமிழ்தாசன்- தான். நான் இண்டிபெண்டண்ட் இயக்குநர் என்றாலும் எனக்கு நிறைய கத்துத் தந்தது அவர் தான். அவர் ஒரு ஜீனியஸ். “விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. எனது வெப்சீரிசைப் பார்த்துவிட்டு என்னை தயாரிப்பாளர்கள் அப்ரோச் செய்தார்கள். இந்தப்படம் யூத் மற்றும் பேமிலி ஆடியன்ஸ்க்கான படமாகவும் இருக்கும்.. நடிகர் சிவகார்த்திகேயன் நான் ஆங்கராக இருந்து சினிமாவிற்கு வரா ஆறு வருடங்கள் ஆனது என்று சொல்லுவார் அதே போல் நானும் சினத்திரையில் இருந்து சினிமாவிற்கு வர ஆறாண்டுகள் ஆகிவிட்டது. நான் முதல் முறையா மேடையின் முன் நிற்கிறேன். பின்னாடி நிறைய உழைத்திருக்கிறேன்.

நானும் சிங்கிள் தான் என்னோட கதை, உங்களோட கதை, நம்மளோட கதை. 30 வயசுல கல்யாணம் பண்ணலன்னா உனக்கு படம் கிடைக்காதுன்னு சொன்னாங்க. படம் கமிட் ஆனதும் எனக்கு கல்யாணம் நடந்தது. அதனால் சிங்கிள்ஸ் இப்படத்தைப் பாருங்க கல்யாணம் நடக்கும்.

6 வருடதிற்கு முன்பு நயன்தாரா மேடத்தை பார்த்த போது எவ்ளோ அழகா இருக்காங்க என்று தோன்றியது. அந்த இன்ஸ்பையர் தான் படத்தில் வரும் நயன்தாரா பற்றிய டயலாக். படத்தில் நிறைய விசயங்கள் புதுசா இருக்கும். படம் கண்டிப்பா நிறைவா இருக்கும். தியேட்டரில் போய் படத்தைப் பாருங்க. தினேஷ் சார், தீப்தி மேடம் எனக்கு நன்றாக சப்போர்ட் செய்தார்கள். படத்தில் இசை அமைப்பாளர் கேமராமேன் உள்ளிட்ட அனைவரும் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

error: Content is protected !!