32°C
விளம்பரம்

தமிழக பாரதீய ஜனதா தலைவரானார் தமிழிசை சவுந்தரராஜன்!

admin சேலம் Published: August 16, 2014 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக நியமனம் ஆனதையடுத்து தமிழக பாரதீய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப் பொறுப்புக்கு தற்போது தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் கட்சித் தலைவர் அமித்ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழக பாஜகவுக்கு தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
tamilisai-soundararajan1-
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக நியமனம் ஆனதையடுத்து தமிழக பாரதீய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் தேசியச் செயலராக இருந்தார். பாஜக மாநில பொதுச்செயலர், துணைத் தலைவர் பதவிகளை ஏற்கனவே வகித்துள்ளார்.அத்துடன் தமிழக பாஜக செய்தி தொடர்பாளராக லலிதா குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் இன்று பாஜக தலைவர் அமித் ஷா, கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். அதன்படி தமிழக பாஜக மாநில தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், மத்தியப்பிரதேசம் மாநிலத்திற்கு நந்த்குமார் சிங் சவுஹான், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு தர்மபால் கவுசிக், அசாம் மாநிலத்திற்கு சித்தார்த் பட்டாச்சார்யா ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகள் குழுவில், 11 துணைத் தலைவர்கள், 8 பொதுச்செயலாளர்கள், 4 இணை பொதுச்செயலாளர்கள், 14 செயலாளர்கள், 10 செய்தித்தொடர்பாளர்கள் ஒரு அலுவல் காரியதரிசி உள்பட 53 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களை தவிர தமிழகம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களுக்கு புதிய மாநில தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே கட்சியினருக்கு அதிர்ச்சி தரும் நடவடிக்கையாக, உ.பி. மாநிலம் சுல்தான்பூர் பாஜக எம்.பி. வருண் காந்தி கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் ராம் மாதவ் பாஜக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெ.பி. நட்டா, ராஜீவ் பிரதாப் ரூடி, முரளிதர் ராவ், ராம்லால் ஆகியோர் பொதுச் செயலாளராக மீண்டும் தொடர்கின்றனர்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்