தகவல் ஆணையம் முன் போராட்டம் பாய் விரித்து தூங்கும் போராட்டம்!

தகவல் ஆணையம் முன் போராட்டம் பாய் விரித்து  தூங்கும் போராட்டம்!

தகவல் ஆணையத்தின் செயல்பாட்டை கண்டித்து ஆணையத்தின் முன்பு பாய் விரித்து தூங்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகே உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முன்பு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் பாய் விரித்து தூங்கும் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்து. இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் பாய்களுடன் அப்பகுதிக்கு வந்தனர்.தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பாய் விரித்து தூங்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவர் களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக இன்று நடைபெற இருந்த மனு விசாரணைகள் அனைத்தும் மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் ஆணையத்தின் வாயிலை நெருங்கும் முன் செந்தில் மற்றும் சிவ இளங்கோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்பு கடும் போராட்டத்திற்கு பிறகே ஆணையத்தின் அருகே காவல் துறை அனுமதித்தது. ஆகிலும் பாய் விரித்து படுக்க கூடாது என்பதில் காவல் துறை கவனமாக இருந்தது
satta panch iyakkam
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முன்னதாக போராட்டம் குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோ ”:தகவல் ஆணையத்திடம் ஏதேனும் தகவல் பெற அணுகும்போது அதிகாரிகள் முறையாக பதில்கள் கூறுவதில்லை. தரக்குறைவாக பேசுகின்றனர். இந்த மாநில தகவல் ஆணையம் செயல்படும் லட்சணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு…
**சட்ட பஞ்சாயத்து இயக்கம் RTI மூலம் கேட்ட கேள்வி: ** ஆணையம் துவங்கியதிலிருந்து ஆணையத்திற்கு எத்தனை மேல்முறையீடுகள் வந்துள்ளன, எத்தனை முடிக்கப்பட்டன, எத்தனை நிலுவையில் உள்ளன ?** தகவல் ஆணையம் பதில்: கேட்கப்பட்ட விவரங்கள் தொகுத்து வைக்கப்படவில்லை !! ?? **இப்படி ஆணையத்துல என்ன வேலை செய்யறீங்களே அதைக் கூட தொகுத்து வைக்கலனா? அப்ப என்னதான் ஆணி பிடுங்கறாங்க ஆணையத்துல ???தற்போது உள்ள ஆணையர்களுக்கு இச்சட்டத்தை பற்றிய அறிவு இல்லை. எனவே புதிதாக நியமிக்கப்படும் ஆணையர்களுக்கு சட்டப்படியான உரிய பயிற்சி அளித்த பிறகு வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும். மேலும் தகவல் ஆணையத்தின் இணையத்தை தமிழிலும் இருக்கும்படி உருவாக்க வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தியே தற்போது இந்த போராட்டம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!