கங்காரு படத்தின் ஜுனியர் சாவித்திரி பிரியங்கா ஆல்பம்
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம், ‘கங்காரு’. அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி, பிரியங்கா, தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கின்றனர். கங்காரு’ பட அனுபவம் பற்றிப் பேசும் போது- “இது அண்ணன் தங்கை பாசம் பற்றிய படம்.என் மீது பாசமுள்ள அண்ணன். அவரை ஊரில் எல்லாரும் ‘கங்காரு’ என்றுதான் அழைப்பார்கள். அந்த கங்காரு பாசத்துடன் தூக்கிச் சுமக்கும் தங்கைதான் நான். என் அண்ணன் ஊருக்கே அடங்காத முரட்டு கங்காரு, தன் தங்கையின் வார்த்தைக்கு மட்டும் அடங்கும். எங்களுக்குள் நடக்கும் பாசமுள்ள சம்பவங்கள் தான் கதை.எனக்கு இரண்டு பாடல்கள் காதல் டூயட்டும் உண்டு அண்ணனுடன் பாசப் பாட்டும் உண்டு. அண்ணன் தங்கை பாசம் என்றால் இன்றும் ஒரே முன் மாதிரி ‘பாசமலர்’படம்தான். அதில் சாவித்திரியம்மா பாசமுள்ள தங்கையாக வாழ்ந்திருப்பார். அவரும் பெரிய கதாநாயகிதான். இருந்தாலும் அந்த தங்கை பாத்திரம் மூலம் எல்லார் மனதிலும் அழுத்தமாக உட்கார்ந்து விட்டார். அதே போல இந்தப் படமும் எனக்கு அமையும்.அதாவது படம் வெளியானால் என்னை ஜுனியர் சாவித்திரி என்று அழைப்பார்கள் ” என்கிறார் நம்பிக்கையுடன்.