டெவில் – விமர்சனம்!

டெவில் – விமர்சனம்!

ருவருக்கு தனது துணையை பிடிக்கவில்லை என்றாலோ அல்லது தனது திருமண வாழ்வில் பெரும் ஈடுபாடுல்லாமல் இருந்தாலோ, அவர்கள் தங்களுடைய துணையை பழிவாங்க முனைவார்கள். அலுவலக நண்பர்கள், நெருங்கிய நட்பு வட்டங்கள் அல்லது ஆன்லைன் மூலம் பழக்கமானவர்களுடன் நெருங்கி பழகுவார்கள். இதன்மூலம் தான் கள்ள உறவில் இருப்பதாக வெளியுலகுக்கும், தனது துணையிடம் வெளிப்படுத்திக் கொள்வது வாடிக்கை. இப்படியான கருத்தை வைத்து முன்னொரு கால தூர்த்ர்சனின் பிடிவாதம் பாணியில் முக்கோணக் காதல், சூழ்நிலை காரணமாக மனம் தடுமாறி தவறான வழியில் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு மனமே பேய் என்பதை சொல்ல முயன்றிருக்கிறார். அதே சமயம் இது போன்ற இம்மாரல் லவ் பார்வையாளர்கர்களிடையே தவறான கண்ணோட்டம் ஏற்படாத வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை கவனமாகக் கோர்த்து தவறான தொடர்புகள் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்வதுடன் இப்படி தவறு செய்பவர்களை மன்னிப்போம், மறப்போம் என்று வலியுறுத்துவதே டெவில்.

அதாவது ஹீரோ விதார்த் மற்றும் ஹீரோயின் பூர்ணா ஆகியோர் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்கள். அந்த திருமணத்திற்குப் பிறகு ஏனோ இருவருக்குள்ளும் ஒரு புரிதலே ஏற்படவில்லை. நெருங்கி நெருங்கி வரும் பூர்ணாவை விலகி விலகி செல்கிறார் விதார்த். இதனால் விரக்தி மனநிலையில் உலா வரும் பூர்ணா ஒரு ஆக்சிடெண்டில் இன்னொரு ஹீரோ திரிகுன்னை சந்திக்க நேர்கிறது. இருவருக்குள்ளும் கேஷூவலாக பழக வழக்கம் போல் அது (கள்ள) காதலாக மாறுகிறது. இதற்கிடையே விதார்த் இன்னொரு நாயகி சுபஸ்ரீ உடன் காதல் தொடர்பில் இருக்கிறார். ஒரு நாள் விதார்த் தன் காதலியுடன் இருக்கும் பொழுது பூர்ணாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். அதே போல் பூர்ணா தன் காதலன் உடன் இருக்கும் பொழுது விதார்த்திடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார்.இச்சூழலில் இவர்களை பின்னணியாகக் கொண்டு ஒரு கொலை நடக்கிறது. இந்த கொலை ஏன்? யார் செய்தது என்ற உளவியல் த்ரில்லர் பாணியில் சொல்லி இருப்பதே டெவில் படக்கதை.

ஹீரோ விதார்த் நம்மில் ஒரு வக்கீலாக நடித்து ஸ்கோர் செய்கிறார். சுபஸ்ரீ இடம் இவர் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதே போல் பூர்ணாவிடம் மண்டியிட்டு அழும் காட்சிகளில் அடடே சொல்ல வைத்து விடுகிறார். இவருக்கும் சுபஸ்ரீக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இன்னொரு நாயகன் திரிகுன் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கும் பூர்ணாவுக்கும் ஆன கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. குறிப்பாக நெருக்கமான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி பூர்ணாவுக்கு நல்ல நடிப்பதற்கான ஸ்கோப் இருக்கும் திரைப்படம். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறது. பிரேமில் அவ்வளவு அழகாக தெரிகிறார், அழகாக நடிக்கிறார், அளவாக பேசி மனதை கொள்ளை அடிக்கிறார். இன்னொரு நாயகி சுபஸ்ரீ கவர்ச்சியில் கலங்கடித்து இருக்கிறார்.

இசை அமைத்திருக்கும் மிஷ்கின் தனது மானசீக குருநாதர் இளையராஜா பாணியிலேயே இசை அமைத்துள்ளார். வரைப் போலவே சில இடங்களில் எந்த இசையையும் தராமல் உணர்வுகளை கடத்துகிறார். பல இடங்களில் தனது குருவை போலவே வயலின் இசையை மிகப் பிரமாதமாக பயன்படுத்தி உள்ளார்.கேமராமேன் கார்த்திக் முத்துகுமாரும் ஒளிப்பதிவில் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

தொடங்கியது முதல் பல்வேறு ட்விஸ்ட்களுடன் செல்கிறது. குறிப்பிட்ட கதை மாந்தர்களை மட்டுமே வைத்து கதை நகர்ந்தாலும் கதாபாத்திர உருவாக்கம் சிறப்பாக இருப்பதால் நம்மால் ரசிக்க முடிகிறது. அதே சமயம் ஒரு ஜானரோடு நிறுத்திக் கொள்ளாமல் த்ரில்லர், டிராமா, ஹாரர் ஜானர்களின் கலவையாக கொண்டு போய் வரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி உணர்வை ஏற்படுத்த வேண்டுமே என்பதற்காக சில காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளது எடுபடவில்லை.

ஆனாலும் வளரும் நகரங்களில் ஹைகிளாஸ் மேமிலிகளில் பெரியவர்களின் வழிகாட்டுதல் தேவை என்பதை சொல்வதாலேயே இந்த டெவில் ஜெயித்து விடுகிறது.

மொத்தத்தில் இந்த டெவிக்ல் – நம் வாழ்வின் கண்ணாடி

மார்க் 2.75/5.

error: Content is protected !!