32°C
விளம்பரம்
Advertisement

ஜாமீனில் வந்துள்ள பவர் ஸ்டார் மீது மீண்டும் ஒரு மோசடி புகார்;

admin சேலம் Published: September 24, 2013 1 நிமிட வாசிப்பு சினிமா செய்திகள்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது கடன் தருவதாக கூறி, பண மோசடி செய்து விட்டதாக வடமாநில என்ஜினியர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள சீனிவாசனை, எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
sep 24 - powerstar
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சமீபத்தில் பல பண மோசடி புகார்கள் எழுந்தது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அவர் மீது மீண்டும் ஒரு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

தனக்கு 25 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியதாகவும், அதற்கு முன்பணமாக தாம் ரூ.20 லட்சத்தையும் அவரிடம் கொடுத்ததாகவும். ஆனால் 2 ஆண்டுகளாகியும் இதுவரை அவர் தமக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை என்றும் கூறி, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த என்ஜினியர் ஒருவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை போலீசில் புகார் செய்துள்ளார்.இதையடுத்து, பவர் ஸ்டார் சீனிவாசனை, எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட மோசடி புகாரில் பவர் ஸ்டார் கைதாகிஇருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடங்கி

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்