ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு ஒபாமா வாழ்த்து!

ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு ஒபாமா வாழ்த்து!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த வாரத்தில் ஹிலாரி கிளிண்டனை நேரில் சந்திக்க உள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

usa june 8

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுக்க, நவ., 8ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியில், ஹிலாரி கிளிண்டன் மற்றும் பெர்னி சாண்டர்ஸ் இடையே, கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், இரண்டு மாகாணங்களில், ஜனநாயக கட்சியின் சார்பில் பிரைமரி தேர்தல்கள் நடந்தன. இதில், கென்டகி மாகாணத்தில், ஹிலாரியும், ஆரேகான் மாகாணத்தில், சாண்டர்சும் வெற்றி பெற்றனர்.

நியூஜெர்சி மாகாணத்தில் நடந்த வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து ஹிலாரி கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராவது உறுதி செய்யப்பட்டுள்ளது.அடுத்த மாதம் கட்சியின் மாநாட்டில் ஹிலாரி அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.அதுமட்டுமின்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் நியூயார்க்கில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய ஹிலாரி, வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பை தனக்கு உருவாக்கித் தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். அத்துடன்ம் ஜனாதிபதி தேர்தலில் இதுவரை எந்த பெரிய அரசியல் கட்சியின் சார்பாகவும் பெண்கள் வேட்பாளராகப் போட்டியிட்டதில்லை என்றும், பெண்களுக்கு இது ஒரு மைல் கல்லாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

Related Posts