செல்லப்பிராணிகளை ரிஜிஸ்டர் பண்ணிடுங்க- சென்னை கார்ப்பரேஷன் வேண்டுகோள்

செல்லப்பிராணிகளை ரிஜிஸ்டர் பண்ணிடுங்க- சென்னை கார்ப்பரேஷன் வேண்டுகோள்

சிங்கார சென்னை என்றும் சூப்பர் சிட்டி என்றும் பெயரெடுத்த சென்னை மாநகராட்சியின் நான்கு நாய்கள் காப்பகங்களில் ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவற்றில் 1,700 நாய்களுக்கு மட்டுமே உரிமம் உள்ளது. இந்நிலையில் சென்னைவாசிகள் இப்போது தங்கள் செல்லப்பிராணிகளை பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்வதன் மூலம் ஆன்டோரேபிஸ் தடுப்பூசிகள் மற்றும் பிற ஊசி போன்ற இலவச சேவைகளைப் பெறலாம்.

“ஒரு கால்நடை மருத்துவர் பதிவு செய்தவர்கள் வீட்டிற்குச் சென்று செல்லப்பிராணியை பரிசோதிப்பார். ஏழு நாட்களுக்குள் செல்லப்பிராணி உரிமம் வழங்கப்படும்” என்று மேயர் ஆர்.பிரியா வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதை அடுத்து மாநகராட்சி ஆணையர் ஜே ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் நான்கு நாய்கள் காப்பகங்களில் ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவற்றில் 1,700 நாய்களுக்கு மட்டுமே உரிமம் உள்ளது.

குடியிருப்பாளர்கள் http://117.232.67.158:8061/login பார்வையிடலாம் மற்றும் 50 ரூபாய் செலுத்தி தங்கள் செல்லப்பிராணிகளைப் பதிவு செய்யலாம்.

சென்னை மாநகராட்சி நாய்கள் காப்பகங்கள் திரு.வி.கா நகர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய இடங்களில் உள்ளன.

error: Content is protected !!