சீனா : ஈவு உலக ஹோல்சேல் மார்கெட்!

சீனா  : ஈவு உலக ஹோல்சேல் மார்கெட்!

ஷாங்காய்யிலிருந்து 300கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சுமார் 2 மணிநேரத்திற்குள் புல்லட் டிரெய்ன் எங்களை ஈவுவில் துப்பியது. ஈவு உலகத்தின் ஹோல் சேல் மார்கெட். பெற்றோரை தவிர எல்லாமே வாங்கலாம் இங்கு. இந்த மார்க்கெட்டை 6 பெரிய வணிக வளாகத்துக்குள் அடக்கியிருக்கிறார்கள். உலக வர்தகம் செய்யும் மக்கள் குறைந்த விலையில் வாங்கி விற்க அமைந்த ஈவு ஒரு உலக அங்காடி. பல்வேறு நாட்டினர் வணிகத்திற்காக வருவதால் அதிக செக்யூரிட்டி செக் . .!

நாங்கள் சீன புத்தாண்டு நடந்து ஒரு மாதம் கழித்தே சென்றோம். ஆயினும் பாதிகடைகளே திறந்திருந்தது. தன் சொந்த ஊரில் புத்தாண்டை கொண்டாட சென்று திரும்ப மனமில்லை போல. இங்கு திறந்திருந்த கடைகளில் மினியேச்சர் ஹெலிகாப்டர், ரொபோ, வித விதமான கார், ஹெவி வெய்கில்ஸ், இப்படி நிறைய மினியேச்சர்கள். நாங்க போயிருக்கும் போது பள்ளி திறக்காதலால் சீனத்து ரெட்டைவால் ரெங்குடுகள் அத்தனையும் பிரிச்சு அக்குவேறு ஆணி வேறா பிரிச்சு விளையாடிட்டு இருந்தாங்க. சீனத்து பசங்க

அத்தனை புத்திசாலித்தனத்துக்கு காரணம் புரிஞ்சுக்கொள்ள முடிஞ்சது. எல்லாமே அவங்க நேர்ல பார்த்து புரிஞ்சு, விளையாடி கத்துக்கொள்ளும் சூழ்நிலை அந்த குழந்தைங்களுக்கு வாய்ச்சிருக்கு. ஒவ்வொரு வகைகளுக்கும் குறைந்தபட்சம் ஒரு ஐந்து லட்சம் மாடல் வகை வகையான பொருள்கள் காட்சிக்கு அணிவகுத்து இருப்பதை பார்த்தாலே வாவ்.

வாட்சஸ், ரப்பர், ஷார்பனர்னு நினைப்போம். ஆனா எத்தனை வித மாடல்ல மெனக்கெட்டு ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செஞ்சு வச்சிருக்காங்க. ஆனா நமக்குன்னு ஒரு பீஸ் பத்து பீஸ்னு வாங்க முடியாது. சும்மா போய் பார்த்துட்டு வரலாம். குறைந்த பட்சம் 500 பீஸ் சில இடங்களில் 100 பீஸ் ஆர்டர் எடுக்கலாம். இங்கே வந்த அப்புறம் தான் என்னமா வேலை செய்யறாங்க. ஐய்யோ கண்ணு கட்டுது. பெண்களே அத்தனை பாரத்தையும் யார் உதவிகூட இல்லாம அனாசியமா ஹேண்டில் செய்யராங்க. பின்ன ஏற்றுமதி வியாபாரம்னா என்ன சும்மாவா. வியப்பு. நாம பத்து பேர் செய்யற வேலைய அவங்க ஒருத்தரே பார்த்துடர மாதிரிதான் பழகியிருக்காங்க. கொஞ்ச நேரம் இருந்து கவனிச்சதுல அவங்க கால்ல ஒரு ஸ்கேர்டிங் இருந்திருக்கலாம். அந்த ஓட்டம் அந்த மெனக்கெடல், உழைப்பு அந்த மண் அந்த மக்களுக்கே வழங்கியிருக்கும் கொடை.

சுபஸ்ரீ மோகன்

error: Content is protected !!