சிறு, குறுந்தொழில்களுக்கான முதலீட்டை ஈர்ப்பதில் டாப் தமிழ்நாடு: அசோசெம் தகவல்

சிறு, குறுந்தொழில்களுக்கான முதலீட்டை ஈர்ப்பதில் டாப் தமிழ்நாடு: அசோசெம் தகவல்

சிறு, குறுந்தொழில்களுக்கான முதலீட்டை ஈர்ப்பதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அசோசெம் தெரிவித்துள்ளது. 3.62 லட்சம் தொழில்முனைவோர்களை எம்.எம்.எம்.இ நாடு முழுவதும் ஈர்த்துள்ள நிலையில், தமிழகம் அதில் 32 சதவீத முதலீட்டை ஈர்த்துள்ளது. States Emergence: A comparative analysis of growth and development என்ற தலைப்பில் அசோசெம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
tn no 1
தமிழ்நாட்டை அடுத்து குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களி்ல் உள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதன் அடிப்படையில் பார்க்கும் போது கடந்த 2010-ம் ஆண்டில் 41,800 விண்ணப்பங்களை பெற்றிருந்த தமிழ்நாடு 2014-ல் 1.6 லட்சம் விண்ணப்பங்களை பெற்றுள்ளது.

மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை, மாநில, பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில் உற்பத்தியை பெருக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வருகின்றன என்று தெரிய வருகிறது..

Related Posts