32°C
விளம்பரம்

சானியா மிர்சாவுக்கு சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 5-வது இடம்

admin சேலம் Published: July 22, 2014 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா தொடர்ந்து 5-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு இன்று வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில் சானியா 5-வது இடத்திலேயே உள்ளார்.மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது சானியாவின் டென்னிஸ் வாழ்க்கை கிட்டதட்ட முடிந்து விட்டது என்றே பேசப்பட்ட நிலையில், மீண்டும் டென்னிஸில் களமிறங்கி விளையாடி சர்வதேச அளவில் இரட்டையர் பிரிவில் 5-வது இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sania_Mirza
அண்மையில் முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி 2-வது சுற்றிலேயே வெளியேறியானாலும் தரவரிசைப் புள்ளிகள் அதிகம் கிடைத்ததன் அடிப்படையில் சானியா 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறினார். சர்வதேச ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் 10 இடங்கள் பின்தங்கி 135-வது இடத்திலும், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் தொடர்ந்து 13-வது இடத்திலும் இருக்கிறார். ரோஹன் போபண்ணா 3 இடங்கள் பின்தங்கி 20-வது இடத்தில் உள்ளார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்