கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்- கலிஃபோர்னியா போலீஸ் ஆக்ஷன்!

கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்- கலிஃபோர்னியா போலீஸ் ஆக்ஷன்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஒட்டிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கலிஃபோர்னியாவில் வாகனங்களை இயக்கு‌பவர் முன்னால் வீடியோதிரை இருப்பது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையிலேயே செசிலியா அபாடி (Cecilia Abadie)-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
nov 2 - Google Glass
கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற மூக்குக் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி கூகுள் கிளாஸ்.

இந்தக் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, ‘ஒகே. கிளாஸ்’ என்று சொன்னதும் உடனடியாக கிளாஸ் செயல்படத் தொடங்கிவிடும். இதில் பாட்டு கேட்பது, திசை அறிவது, வானிலை முன்னறிவிப்பு, செய்தி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை படிக்கலாம், திரும்ப குரல் வழியாகவே அவற்றுக்கு பதில் அனுப்பலாம்.

அத்துடன் இந்த கிளாஸின் வலது பகுதியில் உள்ள சிறிய லென்ஸ் வழியே ஒளிப்படக் கருவியும் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளன. ‘டேக் எ பிக்சர்’ என்று சொன்னால், கிளாஸ் படம் எடுத்துவிடும். மேலும், நீங்கள் பார்க்கும் காட்சியை, உங்கள் நண்பர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பவும் முடியும். இந்த கண்ணாடியில் குரல் மூலமாகவே கூகிளில் வழக்கமான தேடலைச் செய்ய முடியும் ஆனால் வலைத்தளங்களை பார்க்க முடியாது. அதற்காக ஒரு ஆண்ட்ராய்ட் கைப்பேசி வைத்துக் கொண்டு இந்தக் கண்ணாடியின் பலனை முழுமையாக அனுபவிக்கலாம்.

இவ்வளவு வசதி கொண்ட இந்த கண்ணாடியை கூகுள் முதல் கட்டமாக இபபோது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வழங்கியிருக்கிறது. அவர்கள் இந்த கூகுள் கண்ணாடியை அணிந்து,அதன் பயன்பாடு மற்றும் சாத்தியங்களை பரிசோதித்து வருகின்றனர்.இதையடுத்து இவர்கள் கூகுள் கண்ணாடி ஆய்வாளர்கள் என குறிப்பிப்படுகின்றனர். சிசிலியா என்ற இத்தகைய ஆய்வாள்ர்களில் ஒருவரான் இவர் தான் பணியாற்றி வரும் சாண்டியாகோ நிறுவனத்திலிருந்து திரும்பி வரும் போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான வேகத்தில் காரை ஒட்டி வந்த போது தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர் கூகுளின் அதி நவீன கண்ணாடியை அணிந்திருந்தது கண்டறியப்பட்டு அதற்கும் தனியாக அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கூகுள் கண்ணாடி அணிந்து காரோட்டுவது குற்றமா? என தன கூகுள் பக்கத்தில் கேட்டுள்ளார். அநேகமாக இன்னும் வருங்காலத்தில் இந்த கேள்வியை பலரும் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Driver fined for wearing Google Glass.
**********************************************************
Cecilia Abadie was rolling along a California highway on Tuesday night when she was pulled over for speeding.She said she was going 70-something in a 65-mph zone, no big deal. But then the police officer saw what was on Abadie’s face: Google Glass.

error: Content is protected !!