கார்த்தி -நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘தோழா’ பற்றி கொஞ்சம் டீடெய்ல்
பி வி பி சினிமாஸ் தயாரிப்பில் கார்த்தி -நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘தோழா’ வின் இறுதிக் கட்டபணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.அடுத்த மாதம் வெளி வர இந்தப் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இணை பிரியாத நட்பை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ‘தோழா’ உலகெங்கும் உள்ள அருமையான கண்கவர் இயற்க்கை கொஞ்சும் தளங்களில் படமாக் கப்பட்டு உள்ளது. பிரகாஷ் ராஜ், விவேக், மறைந்த நடிகை கல்பனா ஆகியோர் நடித்து உள்ள இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் கோபி சுந்தர் ஆவார்.பி எஸ் வினோத் ஒளிப்பதிவில் , வம்ஷி இயக்கும் ‘தோழா’ மார்ச் மாதம் இறுதியில் வெளிவர உள்ளது.

கார்த்திக் நடித்துள்ள ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல படங்கள் தெலுங்கில் பெரிய வசூலை கொடுத்த படங்கள். அதனால் தெலுங்கு ரசிகர்களுக்கு கார்திக்கை மிகவும் பிடிக்கும். அவர் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படம். பயணம் படத்திற்கு பிறகு நாகார்ஜுனா நடிக்கும் நேரடி தமிழ் படம். பையா படத்திற்கு பிறகு கார்த்திக் தமன்னா இணைந்திருக்கும் படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயசுதா நடிக்கும் படம். முதன் முறையாக அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் என பல சிறப்புகள் படத்திற்கு இருக்கிறது.

தி இன் டச்சபிள் என்ற பிரஞ்சு படத்தின் ரீமேக்தான் தோழா. பிரஞ்சு நாட்டில் செம ஹிட்டான படம். அதை அப்படியே காப்பி அடிக்காமல் நம் நாட்டிற்கேற்ப சில மாற்றங்களை செய்து உருவாக்கி வரு கிறார்களாம் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான நாகார்ஜுனாவுக்கு திடீரென பெராலிக் அட்டாக் வந்து கழுத்துக்கு கீழ் அத்தனை உறுப்புகளும் செயலிழந்து விடுகிறது. பம்பரமாக சுற்றி சுற்றி வந்தவர் ஒரு நாற்காலிக்குள் முடங்கி விடுகிறார். அவரது நாற்காலியை தள்ளிக் கொண்டு செல்லும் உதவி யாளர் பணிக்கு வருகிறார் கார்த்திக். அவருக்கு உலகின் எல்லா சுகத்தையும் உடனடியாக அனுபவித்து விட வேண்டும் என்கிற துடிப்பு. நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறி. தமன்னா நாகார்ஜுனா வின் செகரெட்டரி. இந்த மூவருக்கும் இடையிலான உணர்வு போராட்டம்தான் கதையாம் .

ஆக்ஷன் ஹீரோவான நாகார்ஜுனா நாற்காலியில் உட்கார்ந்தபடியே நடிப்பின் சிகரத்தை தொட்டிருப் பதாக சொல்கிறார்கள். துடிப்பான இளைஞனின் கேரக்டரை கார்த்திக் செம ஜாலியாக செய்கிறாராம். இருவரையும் பேலன்ஸ் செய்யும் பக்குவமான கேரக்டரில் தமன்னா நடிக்கிறார். நாகார்ஜுனாவின் தொழில் போட்டியாளராக பிரகாஷ் நடிக்கிறார். பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்புகள் பிரான்சில் நடந்துள்ளது


