கவர்மெண்ட் வெப்சைட் சர்வீஸ் கவலைக்கிடம்!

பிரதம்ர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் பலரும் ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் ஆக்டிவாக இருந்து சர்வ தேச அளவில் பிரபலமாகி உள்ளார்கள். இந்நிலையில் :மத்திய அரசின், 926 இணையதளங்கள், உரிய முறையில் செயல்படாமல் இருப்பது, சமீபத்தில் நடத்தப்பட்ட தரச்சோதனையில் தெரிய வந்து உள்ளது.

அதிலும் தற்போது ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் மூலம், எளிமையான நிர்வாகம் மக்களை சென்றடைய வேண்டும் என்ற இலக்குடன், மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக, இணையதளங்கள் மற்றும் இணையம் வாயிலான தொடர்பை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்நிலையில், மத்திய அரசின், 957 இணையதளங்களின் சேவை குறித்து, தரச்சோதனை மற்றும் தரச்சான்று இயக்குனரகம், சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில், 31இணையதளங்கள் மட்டுமே, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. மீதமுள்ள, 926 இணையதளங்களும், உரிய முறையில் செயல்படாதது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை செயலர் விஸ்வநாத், “மத்திய அரசு இணையதளங்களின் செயல்பாடு, மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, அனைத்து துறை செயலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து தகவல்களும் உடனுக்குடன், இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.எந்தவொரு இணையதளத்திலும், ‘பக்கத்தை கட்டமைக்கும் பணி நடைபெறுகிறது; மன்னிக்கவும்’ என்ற வாசகத்துடன் இணைய பக்கங்கள் முடங்கி இருக்கக் கூடாது. இணையதளங்கள் முழுவீச்சில் செயல்பட வேண்டும். அனைத்து அமைச்சகங்களுக்கும், அமைச்சரவை செயலர் கடிதம் எழுதி உள்ளார்” என்று அவர் கூறினார்.

Related Posts