எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் நர்சு பணி வாய்ப்பு!
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் தனித்து ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுனத்தில்(AIIMS) காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Nursing Superintendent
கிரேடு “A”
தொகுப்பூதியம்: மாதம் ரூ.41,500
வயதுவரம்பு: 56-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: B.SC. Nursing/Post Basic B.Sc. Nursing முடித்திருக்க வேண்டும். நர்ஸிங் கவுன்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்: 8 வருடங்கள். இதில் இரு வருடங்கள் 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் Assistant Nursing Superintendent பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
M.Sc Nursing முடித்திருப்பது மற்றும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கத் தகுதியாகும்.
பணி: Assitant Nursing Superintendent
கிரேடு “A”
காலியிடங்கள்: 05
தொகுப்பூதியம்: மாதம் ரூ.41,500
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: B.SC. Nursing/Post Basic B.Sc. Nursing முடித்திருக்க வேண்டும். நர்ஸிங் கவுன்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்: 7 வருடங்கள். இதில் இரு வருடங்கள் Nursing Incharge (Grade-I) பணியில் குறைந்தது 150 படுக்கைகளைக் கொண்ட மருத்துவ மனையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
M.Sc Nursing முடித்திருப்பது மற்றும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கத் தகுதியாகும்.
பணி: Staff Nurse Gr-II (Sister Gr-II)
Group: “B”
மொத்த காலியிடங்கள்: 200
தொகுப்பூதியம்: மாதம் ரூ.27,000
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் General Nursing & Midwife பிரிவில் டிப்ளமோ, Post Basic, B.Sc Nursing போன்றவற்றை முடித்திருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான படிப்பை ஆண்கள் முடித்திருக்க வேண்டும்.
‘A’ Grade Nursing & Midewife பிரிவில் மாநில நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது ஆண்கள் அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்: குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் Staff Nurse பணியில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். B.SC /Post Basic B.Sc. Nursing முடித்தவர்கள் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்காலம்: 11 மாதங்கள்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை AIIMS, Rishikesh என்ற பெயரில் Rishikesh மாற்றத்தக்க வகையில் டி.டி அல்லது Pay Order ஆக மட்டும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, All India Institute of Medical Sciences, Rishikesh (Uttarakhand) – 249201
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aiimsrishikesh.edu.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


