எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக்கல்லூரியில் டிகிரி கோர்ஸ் படிக்க வாரீயளா?
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் கற்பிக்கப்பட்டு வந்த திரைத்தொழில் நுட்பங்களுக்கான பட்டயப்படிப்புகள், இனி பட்டப்படிப்புகளாக மேம்படுத்தப்படும் என கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

மேலும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, 2016-2017 கல்வியாண்டு முதல் 4 ஆண்டுகால இளங்கலை – காட்சிக்கலை அதாவது Bachelor of Visual Arts என்னும் பட்டப்படிப்புகள் பல்வேறு பிரிவுகளில் பயிற்றுவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலிலதா அறிவித்திருந்தார்.
அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான Bachelor of Cinematography- Bachelor of Digital Intermediate- Bachelor of Audiography- Bachelor of Direction and Screen Play Writing- Bachelor of Film Editing- Bachelor of Animation and Visual Effects ஆகிய 6 இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்க தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்றும் அடுத்த மாதம் 2-ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


