”எனக்கு திருமணமா? நோ…!” – த்ரிஷா மறுப்பு!

”எனக்கு திருமணமா? நோ…!” – த்ரிஷா மறுப்பு!

ஜோடி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான த்ரிஷா, லேசா லேசா படத்தின் மூலம் கதாநாயகியானார். அதன் பிறகு சாமி, கில்லி, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும் என பல வெற்றி படங்களில் நடித்தார், தமிழ் சினிமாவில் பத்து வருடங்களாக தொடந்து கதாநாயகியாக நடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரும் கூட.இப்படி தொடர்ந்து நடித்தால் படங்கள் ஏறுவது போல வயதும் ஏறும் அல்லவா, அதோடு அவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின.
trisha-wedding-
ஏற்கனவே ராணாவுடன் காதல் என பல தகவல்கள் வெளியானது அந்த தகவல் குறுகிய காலத்தில் ராணாவுடன் முறிவு என மாறியது. பிறகு தமிழில் ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படம் கூட வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றியை அடுத்து அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் ஜெயம் ரவியுடன் அப்பா டக்கரு, பெயரிடப்படாத மணிமாறன் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது முப்பது வயதை தாண்டிய த்ரிஷா திருமணம் செய்ய இது தான் சரியான தருணம் என முடிவு செய்தார்.

அதன்படி நடிகை த்ரிஷாவுக்கும், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என காலை முதலே ஒரு தகவல் திரையுலக வட்டாரங்களிடையே பரவி வந்தது.அது பற்றி பலரும் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது என்றெல்லாம் எழுதினார்கள்.

ஆனால் அது வதந்தியான செய்தி என்று த்ரிஷா சற்று முன்னர் கொஞ்சம் உரத்த குரலில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தன் ட்விட்டர் பேஜ் மூலம் “எனக்கு திருமண நிச்சயம் எதுவும் நடக்கவில்லை. அப்படி ஏதாவது நடந்தால், அது பற்றிய தகவல் என்னிடம் இருந்து வரும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

த்ரிஷா தற்போத சில தமிழ்ப் படங்களிலும், தெலுங்கிலும் நடித்து வருகிறார். கன்னடப் படங்களிலும் நடிக்க அவருக்கு அதிகமான அழைப்புகள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அப்படி ஒரு செய்தியை யார் பரப்பியது என்று தெரியவில்லை.

தகவல் :www.screen4screen.com/trisha

error: Content is protected !!