உபுண்டு ஸ்மார்ட் போன் வரப் போதுங்கோ!
தொழிநுட்ப உலகில் உபுண்டு இயங்குதளத்தை அறியாதவரில்லையெனலாம். மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தின் மூலம் கணனி உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து தனியுரிமை நிலையை தோற்றுவித்துள்ள போதிலும் உபுண்டுவுக்கென தனியானதொரு கூட்டம் உள்ளது.உலகம் பூராகவும் சுமார் 20 மில்லியன் பேர் உபுண்டுவை பயன்படுத்துவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.சிம்பிளாக சொல்வதானால்
வேகம் மற்றும் பாதுகாப்பிற்கு பெயர் பெற்றவை உபுண்டு இயங்குதளம். இந்நிலையில், ஐரோப்பிய தொழில்நுட்ப நிறுவனமான பி.கியூ லேட்டஸ்ட் உபுண்டு எடிசன் ஸ்மார்ட்போன்களை முதல்முறையாக இந்தியாவில் வெளியி்ட உள்ளது. ஐரோப்பிய நிறுவனமாக இருப்பினும், இந்திய பயனாளர்களுக்கு ஏற்ற பல வசதிகளை தந்திருக்கிறது பி.கியூ. குறிப்பாக, குயிக் ஸ்டார்ட் ஸ்கிரீன்கள் இருப்பதால் வேகமாக இயங்குதளத்திற்குள் நுழைய முடியும். தற்போது. முதல் உபுண்டு ஸ்மார்ட் போன்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இம்மாத இறுதியில் உபுண்டு ஸ்மார்ட் போன்களை “ச்னாப்டீல்” இணையத் தளத்தின் மூலமாக இந்தியாவில் பெற்றுக் கொள்ளலாம் என இதனை தயாரிக்கும் பி,கியூ ( BQ ) நிறுவனம் அறிவித்துள்ளது.

“அகுவாரிஸ்” E4.5 ( ரூ. 11,999 ) மற்றும் அகுவாரிஸ் E5 HD ( 13,499 ) என இரண்டு மாடல்கள் முதலில் வெளியாகவுள்ளன. இவை உபுண்டு இயங்குதளத்தை கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு சிம் கார்ட்களை பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
BQ Aquaris E4.5 ஸ்மார்ட் போனில் உள்ள சிறப்பம்சங்கள்
டிஸ்ப்ளே : 5.00 இன்ஸ்
செயலி ( பிராசஸர்) : 1.3GHz
முன் பக்க கமரா : 5 மெகாபிக்ஸல்
ரிசலோஷன் : 720×1280 pixels
ராம் : 1GB
இயங்கு தளம் : உபுண்டு டச்
சேமிப்பகம் : 16GB
பின் புற கமரா : 13-megapixel
பேட்டரி திறன் : 2500mAh
Aquaris E5 HD ஸ்மார்ட் போன்களின் சிறப்புக்கள்
டிஸ்ப்ளே : 4.50- இன்ஸ்
செயலி ( பிராசஸர்) : 1.3GHz
முன் பக்க கமரா : 5 மெகாபிக்ஸல்
ரிசலோஷன் : 540×960 pixels
ராம் : 1GB
இயங்கு தளம் : உபுண்டு டச்
சேமிப்பகம் : 8GB
பின் புற கமரா : 8-megapixel
பேட்டரி திறன் : 2150mAh


